“என் தந்தை மீண்டும் முதல்வராக வேண்டும்” – யதீந்திர சித்தராமையா பேட்டி

Siddaramaiah

எனது தந்தை சித்தராமையாதான் கர்நாடகாவின் அடுத்த முதல்வர் என மகன் யதீந்திர சித்தராமையா பேட்டி.

கர்நாடகா சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்து காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறது. கர்நாடகாவில், ஆட்சி அமைக்க 113 இடங்கள் போதும் என்ற நிலையில், 120க்கும் அதிகமான இடங்களில் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் இருந்து வருகிறது. தேர்தல் ஆணையம் இதுவரை வெளியிட்ட முடிவின்படி 100 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது.

பாஜக 68 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் இணையதளத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதசார்பற்ற ஜனதா தளம் 19, பிறர் 5 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. ஒவ்வொரு சுற்றை எண்ணி முடித்தபின் அதிகாரிகள் அளிக்கும் அதிகாரபூர்வ முடிவு தேர்தல் ஆணையம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், செய்தியாளர் சந்திப்பில் பேசிய கர்நாடக முன்னாள் முதல்வரின் மகன்யதீந்திரா சித்தராமையா, காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வரும். நாங்கள் தனித்து ஆட்சி அமைப்போம் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். பாஜகவை ஆட்சியில் இருந்து வெளியேற்ற நாங்கள் எதையும் செய்வோம். கர்நாடகாவின் நலன் கருதி எனது தந்தை மீண்டும் முதல்வராக வேண்டும்.

ஒரு மகனாக நான் நிச்சயமாக அவரை முதலமைச்சராகப் பார்க்க விரும்புகிறேன். அவரது கடந்த ஆட்சியில் மிகச்சிறந்த ஆட்சி இருந்தது. இந்த முறையும் அவர் முதல்வராக இருந்தால் ஊழல் மற்றும் தவறான ஆட்சியின் போக்கு களையப்படும்  எனவும் யதீந்திர சித்தராமையா பேட்டியளித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்