2026 உலகக் கோப்பை லோகோவை வெளியிட்டது ஃபிஃபா.!

FIFA logo2026

2026 ஆம் ஆண்டு ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பைக்கான அதிகாரப்பூர்வ லோகோவை வெளியிட்டது ஃபிஃபா.

ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை 2026 ஆம் ஆண்டுக்கான லோகோவை, ஃபிஃபா தலைவர் கியானி இன்ஃபான்டினோ இன்று வெளியிட்டார். ஃபிஃபா உலகக் கோப்பை வரலாற்றில் மூன்று நாடுகள் போட்டியை நடத்துவது இதுவே முதல் முறை. அதாவது அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகள் ஃபிஃபா 2026 உலகக்கோப்பை தொடரை நடத்துகின்றன.

இது கால்பந்து ரசிகர்களுக்கு 2026ஆம் ஆண்டிற்கான மிகப்பெரிய விருந்து, மற்றும் இது ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை தொடரின் 26-வது பதிப்பாகும். ஃபிஃபா உலகக் கோப்பை 2026ஆம் ஆண்டில் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 32 உலகின் சிறந்த அணிகள் இந்த உலகக்கோப்பைக்காக போராடும்.

கனடா, மெக்சிகோ மற்றும் அமெரிக்காவில் உள்ள 16 நகரங்களில் 104 போட்டிகள் விளையாடப்பட உள்ளன. ‘WE ARE 26’ எனும் 2026 ஆம் ஆண்டு  உலகக்கோப்பைக்கான லோகோ(Logo) வெளியீட்டு விழாவில் இன்று ஃபிஃபா அமைப்பு அதிகாரப்பூர்வ லோகோவை வெளியிட்டது. கடந்த ஆண்டு 2022 ஃபிஃபா உலகக் கோப்பை தொடர் முதன்முறையாக அரபு நாட்டில்(கத்தாரில்) நடைபெற்றது, இதில் அர்ஜென்டினா அணி சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.</p

>

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்