ரூ.2,000 நோட்டுகளை செலுத்த கட்டுப்பாடு இல்லை.. இதற்கு மட்டும் கட்டுப்பாடு – வங்கி அதிகாரிகள் விளக்கம்!

Rs 2,000 note withdraw

ரூ.2,000 நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்திருந்த நிலையில், வங்கி அதிகாரிகள் விளக்கம்.

ரூ.2,000 நோட்டுகளை வைத்திருப்போர் அவற்றை தங்களது சொந்த வங்கி கணக்கில் செலுத்துவதற்கு எவ்வித கட்டுப்பாடும் இல்லை என ரிசர்வ் வங்கி அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர். ரூ.2,000 நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்திருந்த நிலையில், வங்கி அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.

ரூ.2,000 நோட்டுகள் வைத்திருப்போர் தங்களின் வங்கி கணக்குகளில் எவ்வளவு வேண்டுமானாலும் டெபாசிட் செய்து கொள்ளலாம். ரூ.2,000 நோட்டு வைத்திருப்போர் தங்கள் சேமிப்பு கணக்கு மட்டுமின்றி, வங்கி கடனை திருப்பி செலுத்தவும் கட்டுப்பாடு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெபாசிட், இதர பணபரிவர்தனைகளுக்கு செப்டம்பர் 30-ஆம் தேதி வரை ரூ.2,000 நோட்டுகளை வங்கிகள் பெற்றுக் கொள்ளலாம். ரூ.2,000 நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றுவதற்கான நடைமுறை வரும் 23-ஆம் தேதி தொடங்குகிறது.  அதிகபட்சம் ஒரே நேரத்தில் ரூ.20 ஆயிரம் மதிப்புக்கு மட்டுமே 2,000 ரூபாய் நோட்டுகளை மட்டுமே மாற்றி கொள்ளலாம் என்றுள்ளனர்.

வங்கிகளில் கூட்டம் கூடுவதை தடுக்க ஒருவர் ரூ.2,000 பதிப்பிலான 10 தாள்களை மட்டுமே மாற்ற அனுமதி வழங்கியுள்ளது ரிசர்வ் வங்கி. மேலும், ரூ.2,000 நோட்டுகளை வங்கியில் கொடுத்து பிற நோட்டுகளாக மாற்றி கொள்ள மட்டுமே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, நாள் ஒன்றுக்கு 10 நோட்டுகள் வீதம் ரூ.2,000 நோட்டுகளை வங்கியில் கொடுத்து பிற நோட்டுகளாக பெற முடியும்.

தற்போது புழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. ரூ.2,000 நோட்டுகளை விநியோகிப்பதை உடனடியாக நிறுத்துமாறு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. மே மாதம் 23 முதல் 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றி கொள்ளலாம் என்றும் செப்.30-ஆம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும் எனவும் தெரிவித்திருந்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்