விக்ரம் சார் எப்படி இருக்கிறார்..? மனம் திறந்த மாளவிகா மோகனன்.!!

vikram and malavika mohanan

நடிகை மாளவிகா மோகனன் தற்போது நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக  இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது. படத்திற்காக மாளவிகா மோகனன் வெறித்தனமாக தயாராகி வருகிறார் என்றே கூறலாம்.

Malavika Mohanan
Malavika Mohanan [Image source : file image ]

கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட தற்காப்புக் கலையான சிலம்பம் கற்றுக்கொண்ட வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியீட்டு இருந்தார். அந்த வீடியோக்கள் கூட இணையத்தில் வைரலானது. இதனையடுத்து, விக்ரம் குறித்து மாளவிகா மோகனன் செய்த பதிவு ஒன்று வைரலாகி வருகிறது.

எப்போதும் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்த்து வரும் மாளவிகா மோகனன் நேற்று டிவிட்டரில் #AskMalavika மோகனன் என்ற ஹாஸ்டேக் மூலம் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து வந்தார். அப்போது ரசிகர் ஒருவர் விக்ரம் சார் எப்படி இருக்கிறார்..? என கேள்வி எழுப்பினார்.


அதற்கு பதில் அளித்த மாளவிகா மோகனன் ” இப்போது தங்கலான் படத்தை திரும்பிப் பார்க்கும்போது, விக்ரம் சார் இல்லாத கடினமான பயணத்தை என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. அவர் ஒவ்வொரு அடியிலும், கிட்டத்தட்ட ஒவ்வொரு ஷாட்டிலும் எனக்கு உதவியிருக்கிறார். அவர் தன்னலமற்றவர், தன்னைச் சுற்றியுள்ள அனைவரிடமும் மிகுந்த அக்கறை கொண்டவர், சக நடிகராக ஊக்குவிப்பவர் & சுற்றி இருப்பதில் மிகவும் வேடிக்கையாக இருப்பவர்! அவரது நகைச்சுவை உணர்வு நாம் சொல்வது போல் “வெற லெவல்” என கூறியுள்ளார். இந்த பதிவு தற்போது இணயத்தில் வைரலாகி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்