சூடு பிடிக்கும் அரசியல் களம்: ஒரே நாளில் 2வது முறையாக முதல்வர் ஸ்டாலினுடன் ஓபிஎஸ் சந்திப்பு.!
பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறிய நிலையில், ஆழ்வார்பேட்டையில் முதல்வர் ஸ்டாலினுடன் ஓபிஎஸ் சந்தித்துள்ளார்.

சென்னை : இன்று காலை தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறினார் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதிகார்பூர்வமாக அறிவித்தார். சமீபத்தில், தமிழ்நாடு வருகை தந்த பிரதமர் மோடி, ஓபிஎஸ்ஸை சந்திக்க மறுத்த நிலையில், பாஜக உடனான உறவு இன்றுடன் முறிந்துவிட்டதாக ஓபிஎஸ் அணி அறிவித்தது.
இதனிடையே, அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்தை சேர்க்க மாட்டேன் என எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக இருந்த நிலையில், இன்று காலை நடைபயிற்சியின் போது முதல்வர் ஸ்டாலினை ஓபிஎஸ் பார்க்கில் சந்தித்து பேசியதால் திமுகவில் இணைய வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
அதன்படி, பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறிய நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டை முதலமைச்சர் இல்லத்தில் மு.க.ஸ்டாலினை சந்திக்க வந்த முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ்-ஐ, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாசல் வரை வந்து வரவேற்றார்.
ஏற்கனவே, இன்று காலையில் நடைபயிற்சியின் போது முதலமைச்சரை சந்தித்து ஓபிஎஸ் நலம் விசாரித்த நிலையில், தற்போது மீண்டும் சந்தித்ததால், தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.