11 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் – தலைமைச் செயலாளர் உத்தரவு.!
தமிழ்நாட்டில் 11 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை : தமிழகத்தில் 11 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த இடமாற்றம் உத்தரவை தமிழ்நாடு அரசு தலைமை செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, ஐ.ஏ.எஸ் அதிகாரிகளான பிரசாந்த், ராஜகோபால் சுன்கரா, இரா.கஜலட்சுமி, முரளீதரன் உள்ளிட்ட 11 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த இடமாற்ற உத்தரவு இன்று வெளியிடப்பட்டது, இது மாநில அரசின் நிர்வாக மறுசீரமைப்பின் ஒரு பகுதியாகும்.
அதன்படி, நிதித்துறை (செலவினம்) செயலாளராக பிரசாந்த், இணை செயலாளராக ராஜகோபால் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், போக்குவரத்துதுறை அரசு முதன்மை செயலாளராக சுன்சோங்கம் ஜடக், வருவாய் நிர்வாகம், பேரிடர் மேலாண்மை இணை ஆணையராக கிரண் குர்லாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
11 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் pic.twitter.com/fH1q8S3lyu
— தங்க.காளிப்பாண்டி (@sureshkalipandi) July 31, 2025