சித்தராமையா தலைமையில் கர்நாடக புதிய அமைச்சர்கள் பட்டியல் இதோ.. காங். தலைவர் கார்கே மகனுக்கு வாய்ப்பு.!

Siddaramaiah

இன்று முதல்வராக பதவியேற்க உள்ள சித்தராமையா தலைமையில் கர்நாடக புதிய அமைச்சர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. 

நடைபெற்று முடிந்த 224 கர்நாடக சட்டமன்ற தொகுதிக்களுக்கான தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களை பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளது. சித்தராமையா கர்நாடக புதிய முதல்வராகவும், டி.கே.சிவகுமார் துணை முதல்வராகவும் இருப்பார்கள் என காங்கிரஸ் தலைமை அறிவித்துவிட்டது.

இன்று பெங்களூருவில் பிரமாண்டமாக பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளது. பிற்பகல் 12.30 மணியளவில் விழா துவங்குகிறது. தற்போது சித்தராமையா தலைமையில் அமைச்சர் பதவி ஏற்கப்போகும் முதற்கட்ட பட்டியல் வெளியாகியுளளது.

அதன் படி, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மகன் பிரியங் கார்கே, டாக்டர் ஜி பரமேஸ்வரா, கேஎச் முனியப்பா, கேஜே ஜார்ஜ், எம்பி பாட்டீல், சதீஷ் ஜார்கிஹோலி, ராமலிங்க ரெட்டி மற்றும் பிஇசட் ஜமீர் அகமது கான் ஆகிய 8 பேர் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்