கிழக்கு பென்சில்வேனியாவில் துப்பாக்கிச் சூடு..! 2 குழந்தைகள் உட்பட 3 பேர் உயிரிழப்பு..!

கிழக்கு பென்சில்வேனியாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு குழந்தைகள் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர்.
கிழக்கு பென்சில்வேனியாவின் லெபனான் மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில் 2 குழந்தைகள் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 33 வயதுடைய ஒருவர் காயமடைந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்கள் 19 வயதான ஜோசுவா லுகோ-பெரெஸ், 8 வயதான ஜீசஸ் பெரெஸ்-சலோம் மற்றும் 9 வயதான செபாஸ்டியன் பெரெஸ்-சலோம் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து லெபனான் காவல் துறையின் தலைமை காவலர் ஃபிஷர் கூறுகையில், இந்த விசாரணையின் ஆரம்ப கட்டத்தில் ஒருவர் குறிவைக்கப்பட்டதாகத் தெரிகிறது, பாதிக்கப்பட்ட மற்ற மூன்று பேர் இதில் தொடர்பில்லாதவர்கள் என்று தெரிவித்தார். இதற்கிடையில், ஒரு வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தியதைத் தொடர்ந்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.