ஆவின் நிர்வாகம் நஷ்டத்தில் இயங்கவில்லை – அமைச்சர் மனோ தங்கராஜ்

A's administration is not running at a loss - Minister Mano Thangaraj

manothangaraj

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு பால் கொள்முதல் நிலையங்களின் எண்ணிகை அதிகரிக்கப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி.

பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்கள் நாகர்கோவில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், ஆவின் நிறுவனம் நஷ்டத்தில் இயங்கவில்லை. ஆவினின் மூலதன செலவுகளை உயர்த்தி வேறு செலவுகளை குறைக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு பால் கொள்முதல் நிலையங்களின் எண்ணிகை அதிகரிக்கப்படும். வாடிக்கையாளர்களுக்கு தரமான பால் மலிவான விலையில் கொடுப்பதற்கான திட்டங்கள் ஒவ்வொன்றாக தீட்டப்படும். தினந்தொறும் 45 லட்சம் லிட்டர் பால் கையாளும் திறன் இந்த ஆண்டு இறுதிக்குள் 70 லட்சம் லிட்டராக அதிகரிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.