StockMarkets: இரண்டாவது நாளில் சரிவு..! சென்செக்ஸ் 161 புள்ளிகள் குறைவு..!

பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 161.69 புள்ளிகள் சரிந்து 62,625 ஆகவும், என்எஸ்இ (NSE) நிஃப்டி 18,557 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.
வாரத்தின் முதல் நாளான நேற்று ஏற்றத்துடன் வர்த்தகமாகிவந்த இந்தியப் பங்குச்சந்தை, 2 வது நாளான இன்று சரிவுடன் வர்த்தகத்தைத் தொடங்கியுள்ளது. இன்றைய வர்த்தக நாளில் 62,738 புள்ளிகள் எனத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 161.69 புள்ளிகள் அல்லது 0.26% என சரிந்து 62,625 புள்ளிகளாக வர்த்தகம் ஆகிறது.
மேலும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 36.70 புள்ளிகள் அல்லது 0.20% சரிந்து 18,557 புள்ளிகளாக வர்த்தகம் நடைபெற்று வருகிறது. முந்தைய வர்த்தக நாள் முடிவில் சென்செக்ஸ் 62,787 புள்ளிகளாகவும், நிஃப்டி 18,593 புள்ளிகளாகவும் வர்த்தகம் நிறைவடைந்தது.
இதற்கிடையில், அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவிற்கு சந்தையில் முதலீடு செய்து வரும் வேளையில் உள்நாட்டு முதலீட்டாளர்கள் தங்களது அதிகப்படியான பங்குகளை விற்பனை செய்து வருகின்றனர். கடந்த மாதங்களை விட மே மாதத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் கிட்டத்தட்ட ரூ.30,000 கோடி முதலீடு செய்துள்ளனர்.
மாருதி சுசுகி இந்தியா, அல்ட்ராடெக் சிமெண்ட், டைட்டன் நிறுவனம், கோடக் மஹிந்திரா வங்கி, ஆக்சிஸ் வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்படுகின்றன. டெக் மஹிந்திரா, இன்ஃபோசிஸ் லிமிடெட், எச்சிஎல் டெக்னாலஜிஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், விப்ரோ லிமிடெட் உள்ளிட்ட நிறுவங்களின் பங்குகள் சரிவுடன் காணப்படுகின்றன