பொம்மை இசை வெளியீட்டு விழாவில் 2 பிரபலங்கள்..? எதிர்பார்ப்பை எகிற வைத்த புதிய அப்டேட்.!!

BommaifromJune16th

இயக்குனரை ராதாமோகன் இயக்கத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகி நீண்ட ஆண்டுகளாக வெளியாகாமல் இருக்கும் திரைப்படம் பொம்மை. இந்த திரைப்படம் ஒரு வழியாக படம் வரும் 16-ஆம் தேதி திரையரண்ங்குகளில் வெளியாகவுள்ளது.

BOMMAI
BOMMAI [Image Source : Twitter/@iam_SJSuryah]

இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஏற்கனவே படத்தில் இருந்து வெளியான பாடல்கள் மற்றும் டிரைலர் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று படத்தின் மீதிருந்த எதிர்பார்ப்பை அதிகமாக்கியது.

இந்த நிலையில், தற்போது படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை 11 மணிக்கு நடைபெறும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, இந்த இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக 2 பிரபலங்கள் கலந்துகொள்ளவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அப்டேட்டை பார்த்த ரசிகர்கள் விழாவில் கலந்துகொள்ளப்போவது சிவகார்த்திகேயன், லோகேஷ் கனகராஜ் என்றும், லோகேஷ் கனகராஜ் மற்றும் வெங்கட் பிரபும் எனவும், மேலும் சிலர் ஜிவிபிரகாஷ் மற்றும் லோகேஷ் கனகராஜ் என கூறி வருகிறார்கள். இந்த பொம்மை இசை வெளியீட்டு விழாவிற்கு வரப்போகும் 2 பிரபலங்கள் யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்