ஜூன் 9-ல் டெல்டா மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!

மேட்டூர் அணையில் ஜூன் 12-ஆம் தேதி நீர் திறக்கப்பட உள்ள நிலையில், டெல்டா மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்கிறார் முதலமைச்சர்.
டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 9ம் தேதி நேரில் ஆய்வு மேற்கொள்கிறார். பாசனத்துக்காக மேட்டூர் அணையில் ஜூன் 12-ஆம் தேதி நீர் திறக்கப்பட உள்ள நிலையில், வரும் 9-ஆம் தேதி டெல்டா மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்கிறார் முதலமைச்சர் முக ஸ்டாலின். தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுத்துறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடி தொடங்கும் நிலையில் ஆய்வு செய்ய உள்ளார்.