சென்னையில் ‘லியோ’ ஸ்பாட்…த்ரிஷாவுடன் குத்தாட்டம் ஆடும் விஜய்…? வெளியான சூப்பர் தகவல்.!!

vijay trisha dance

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் லியோ படத்திற்கான படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை 7 ஸ்க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்து வருகிறார்.

இந்த படத்தில் இருந்து அடிக்கடி சில தகவல்கள் வெளியாவது வழக்கமான ஒன்று. அந்த வகையில், தற்போது பிறவும் டகால் என்னவென்றால், லியோ திரைப்படத்தின் இறுதி பாடல் படப்பிடிப்பு சென்னையில் இன்று நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.  பாடல் பிரமாண்டமாக இருக்கவேண்டும் என்பதற்காக 2000 நடன கலைஞர்களுடன் ரிகர்சல்  செய்து நடனம் ஆடுவதற்கு தயாராகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த பாடலில் த்ரிஷாவும் விஜய்யுடன் இணைந்து நடனம் ஆடவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு விஜய் மற்றும் த்ரிஷா இருவரும் இணைந்து நடித்த படங்களில் இருவரும் நடனம் ஆடிய பாடல்கள் அனைத்துமே மிகப்பெரிய ஹிட் ஆகியுள்ள நிலையில், இந்த பாடலும் அந்த வரிசையில் இடம்பெறும் என கூறப்படுகிறது.  விரைவில் படத்தின் மற்ற அப்டேட்டுகளை படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், லியோ திரைப்படம் சமீபத்தில் ப்ரீ-ரிலீஸ் அதிக தொகைக்கு விற்பனையான தமிழ்ப் படம் என்ற சாதனையை  படைத்துள்ளது. தென்னிந்தியப் படங்களில் ‘ஆர்ஆர்ஆர்’ மற்றும் ‘சலார்’ ஆகிய படங்களுக்குப் பிறகு அதிக தொகைக்கு வாங்கப்பட்ட 3-வந்து படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்