அதிவேக சார்ஜிங்..அசத்தலான ‘Realme GT 3’ ஸ்மார்ட்போன்..! எப்போது வெளியீடு தெரியுமா..?

Realme GT 3

ரியல்மீ ஜிடி 3 (Realme GT 3) ஸ்மார்ட்போன், உலக அளவில் வெளியாகவுள்ள தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் உள்ள மிகவும் பிரபலமான ஸ்மார்ட்போனை தயாரிப்பு நிறுவனமான ரியல்மீ, ஒவ்வொரு முறையும் தனது புதிய தயாரிப்புகளை விற்பனைக்காக சந்தையில் அறிமுகப்படுத்துகிறது. அந்த வகையில் ஜூன் 8-ம் தேதி ரியல்மீ 11 ப்ரோ 5ஜி சீரிஸை அறிமுகப்படுத்தியது. அதனைத் தொடர்ந்து அடுத்த அதிரடியான ஒரு ஸ்மார்ட்போனை வெளியிட உள்ளது.

Realme GT 3
Realme GT 3 [Image Source : Twitter/@TECH__MUKUL
]

அதன்படி, இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற MWC 2023 நிகழ்வில் ரியல்மீ ஜிடி 3 ஸ்மார்ட்போன் (Realme GT 3) அறிமுகப்படுத்தப்பட்டது. இப்பொழுது, ரியல்மீ ஜிடி 3 ஸ்மார்ட்போன், உலக அளவில் வெளியாகவுள்ள தேதி ஊடகங்களில் கசிந்துள்ளது. அதன்படி, இந்த ரியல்மீ ஜிடி 3 ஸ்மார்ட்போன் ஜூன் 14 தேதி உலக அளவில் வெளியாகவுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் உள்ள சிறப்பம்சங்களை கீழே காணலாம்.

ரியல்மீ ஜிடி 3 டிஸ்பிளே (Display):

இந்த Realme GT 3 ஆனது 1240 x 2772 பிக்சல்கள் கொண்ட 6.7 இன்ச் AMOLED டிஸ்பிளேயுடன் வரவுள்ளது. இது 144Hz ரெபிரெஷிங் ரேட்,  1400 nits உச்சகட்ட பிரகாசம் (Brightness), 360Hz தொடு மாதிரி வீதம் (Touch Sampling) கொண்டுள்ளது.

Realme GT 3
Realme GT 3 [Image Source : Twitter/@@SaudiAndroid]
ரியல்மீ ஜிடி 3 பிராசஸர் (Processor):

இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 (Qualcomm Snapdragon 8+ Gen 1) பிராசஸருடன், Adreno நெக்ஸ்ட்-ஜென் GPU மூலம் இயக்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு 13-அடிப்படையிலான Realme UI அமைப்பைக் கொண்டுள்ளது.

Realme GT 3
Realme GT 3 [Image source : file image]
ரியல்மீ ஜிடி 3 கேமரா (Camara):

இதன் பின்புற கேமரா அமைப்பில் 50 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்.பி அல்ட்ரா-வைட் கேமரா, 2 எம்.பி மைக்ரோஸ்கோப் ஆகியவை அடங்கும். முன்பக்கத்தில் 16 எம்.பி செல்ஃபி கேமரா உள்ளது.

Realme GT 3
Realme GT 3 [Image source : file image]
ரியல்மீ ஜிடி 3 பேட்டரி & நினைவகம் (Battery & Storage):

ரியல்மீ ஜிடி 3 ஸ்மார்ட்போன் 240W சூப்பர்வூக் சார்ஜிங் ஆதரவுடன் 4,600mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. 240W சார்ஜிங் ஆதரவுடன் வரும் முதல் போன் இதுவாகும். இதனால் சில நிமிடங்களிலேயே பேட்டரி சார்ஜ் முழுமையடைந்த்து விடும். இந்த ஸ்மார்ட்போன் 8GB+128GB, 12GB+256GB, 16GB+256GB, 16GB+512GB மற்றும் 16GB+1TB ஆகிய வகைகளில் வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்