INDvsAUS: தடுமாறும் ஆஸ்திரேலியா அணி..! உணவு இடைவேளை வரை 201/6 ரன்கள் குவிப்பு..!

INDvsAUS

ஆஸ்திரேலியா அணி உணவு இடைவேளை வரை 201 ரன்கள் குவித்து விளையாடி வருகிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இன்று நான்காவது நாளாக தொடங்கி நடைபெற்ற வருகிறது. நேற்று மூன்றாவது நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் விக்கெட்டுகளை இழந்து தடுமாறினார்.

3ம் நாள் ஆட்ட முடிவில் 44 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 123 ரங்களை எடுத்த ஆஸ்திரேலிய அணி, இன்றைய ஆட்டத்திலும் சிறிது தடுமாற்றத்துடன் விளையாடி வருகிறது. அதன்படி, லபுஸ்சன் மற்றும் கிரீன் இருவரும் நிதானமாக விளையாடி வந்த நிலையில், லபுஸ்சன் அரை சதத்தை தவறவிட்டு 41 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அதன்பிறகு அலெக்ஸ் கேரி களமிறங்க, ஜடேஜா வீசிய பந்தில் கேமரூன் கிரீன் 25 ரன்களுடன் களத்தை விட்டு வெளியேறினார். 4ம் நாள் உணவு இடைவேளை முடிவில் ஆஸ்திரேலியா 70 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் குவித்து விளையாடி வருகிறது.

அதில் அலெக்ஸ் கேரி 41* ரன்கள் மற்றும் மிட்செல் ஸ்டார்க் 11* ரன்கள் எடுத்து களத்தில் நிற்கின்றனர். இந்திய அணி சார்பில் ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்