செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கக்கோரி ஆளுநரிடம் அதிமுக மனு.!

தமிழக ஆளுநரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க அதிமுக மூத்த நிர்வாகிகள் ஆளுநர் மாளிகைக்கு வந்துள்ளனர்.
அதிமுக மூத்த நிர்வாகிகள், ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்க மாலை நேரம் கேட்டிருந்த நிலையில், தற்போது ஆளுநரை சந்தித்து மனு அளித்துள்ளனர். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் ஜெயக்குமார், விஜய பாஸ்கர், சி.வி. சண்முகம், பெஞ்சமின் ஆகியோர் ஆளுநர் மாளிகையில் ஆளுநரை சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கக்கோரியும், 30,000 கோடி முறைகேடு தொடர்பாக வெளியான ஆடியோ விவகாரம் குறித்தும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறும் கோரிக்கை மனுவை ஆளுநரிடம் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் அளித்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
“தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி பொய்ப் பிரச்சாரம் செய்யும் பாகிஸ்தான்” – விக்ரம் மிஸ்ரி.!
May 10, 2025
”விமானப்படை தளங்களை தாக்கும் அனைத்து முயற்சிகளும் முறியடிப்பு” – கர்னல் சோஃபியா குரேஷி.!
May 10, 2025