மீண்டும் பரபரப்பு..! தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் நடுவே கைகலப்பு..!

NEPIND Clash

தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் லீக் போட்டியில் இந்திய மற்றும் நேபாள வீரர் இருவரும் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

பெங்களூரு ஸ்ரீ கண்டீரவா ஸ்டேடியத்தில் நேற்று நடந்த தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் லீக் போட்டியில் (SAFF) இந்தியா மற்றும் நேபாளம் அணிகள் மோதியது. இந்த போட்டியில் இந்திய அணியில் சுனில் சேத்ரி மற்றும் மகேஷ் சிங் இருவரும் அடித்த கோல்களினால், இந்தியா 2-0 என்ற கோல் கணக்கில் நேபாளத்தை வீழ்த்தியது.

இதனால் இந்திய அணி தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இந்த போட்டியின் போது, ​​இந்தியா வீரர் ராகுல் பெகே மற்றும் நேபாள வீரர் பிமல் கர்தி மகாருக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

போட்டியில் மிக உயரமாக வீசப்பட்ட பந்தை இருவரும் தலையால் அடிக்க முயற்சிக்கும் போது, நேபாள வீரர் பிமல் கர்தி கீழே விழுந்துள்ளார். பிறகு அவர் எழுந்ததும் ராகுல் பெகேவிடம் சண்டையில் ஈடுபடுகிறார். இவர்கள் இருவரையும் தடுப்பதற்கு இரு அணி வீரர் முயற்சி செய்தனர்.

பிறகு, நடுவர்கள் குறுக்கிட்டு இருவரையும் சமாதானப்படுத்தினர். முன்னதாக, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டியின் போதும் வீரர்கள் மோதலில் ஈடுபட்டனர். அந்த போட்டியிலும் பாகிஸ்தான் அணியை ஒரு கோலும் அடிக்க விடாமல் இந்தியா 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்