4 மாநிலங்களுக்கு புதிய மாநில தலைவர்களை அறிவித்தது பாஜக தலைமை.!

4 மாநிலங்களுக்கு புதிய மாநில தலைவர்களை பாஜக தலைமை அறிவித்துள்ளது.
பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, 4 மாநிலங்களுக்கு புதிய தலைவர்களை நியமித்து உத்தரவு பிறப்பித்து உள்ளார். அதில், ஜார்கண்ட் , ஆந்திரா, தெலுங்கானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களுக்கு புதிய பாஜக மாநில தலைவர்கள் அறிவிக்கப்பட்டுள்னர்.
மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சார துறையின் அமைச்சராக உள்ள கிசான் ரெட்டி தெலுங்கானா மாநில பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பஞ்சாப் மாநில தலைவராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் குமார் ஜாக்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜார்கண்ட் மாநில பாஜக தலைவராக முன்னாள் முதல்வர் பாபுலால் மராண்டி நியமிக்கப்பட்டுள்ளார். ஆந்திர மாநில தலைவராக முன்னாள் மத்திய அமைச்சர் புரந்தேஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார். ஆந்திர முன்னாள் முதல்வர் கிரண் குமார் ரெட்டி தேசிய பாஜக செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.