சட்டம் ஒழுங்கு அரசின் கட்டுப்பாட்டில் இல்லை என்பது மீண்டும் மீண்டும் புலப்படுகிறது – அண்ணாமலை

திறனற்ற திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, தமிழகம் குற்றவாளிகளின் புகலிடம் ஆகியிருக்கிறது என அண்ணாமலை ட்வீட்.
செங்கல்பட்டில், வழக்கு விசாரணைக்காக ஆஜராக வந்த ஒருவரை, நீதிமன்றம் அருகில் வைத்து, நாட்டு வெடிகுண்டு வீசியும் அரிவாளால் வெட்டியும் கொல்ல முயற்சி செய்துள்ள சம்பவம் குறித்து அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.
அந்த பதிவில், செங்கல்பட்டில், வழக்கு விசாரணைக்காக ஆஜராக வந்த ஒருவரை, நீதிமன்றம் அருகில் வைத்து, நாட்டு வெடிகுண்டு வீசியும் அரிவாளால் வெட்டியும் கொல்ல முயற்சி செய்துள்ள சம்பவம் குறித்து அறிந்து அதிர்ச்சியடைந்தேன். நீதிமன்றத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவிற்கு ஓட ஓட விரட்டி வெட்டியிருக்கிறது அந்த கும்பல்.
திறனற்ற திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, தமிழகம் குற்றவாளிகளின் புகலிடம் ஆகியிருக்கிறது. நீதிமன்றங்கள் அருகிலும் இது போன்ற குற்றச் சம்பவங்கள் நடப்பது, இந்த ஆட்சியில் தொடர்கதை ஆகியிருக்கிறது. சட்டம் ஒழுங்கு அரசின் கட்டுப்பாட்டில் இல்லை என்பது மீண்டும் மீண்டும் புலப்படுகிறது.
இது போன்ற தொடர் சம்பவங்களால், பொதுமக்களுக்கு தங்கள் பாதுகாப்பு குறித்த கேள்வி எழுந்திருக்கிறது. திமுக அரசு தனது மெத்தனப் போக்கைத் தொடராமல், உடனடியாகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன்.’ என தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டில், வழக்கு விசாரணைக்காக ஆஜராக வந்த ஒருவரை, நீதிமன்றம் அருகில் வைத்து, நாட்டு வெடிகுண்டு வீசியும் அரிவாளால் வெட்டியும் கொல்ல முயற்சி செய்துள்ள சம்பவம் குறித்து அறிந்து அதிர்ச்சியடைந்தேன். நீதிமன்றத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவிற்கு ஓட ஓட விரட்டி வெட்டியிருக்கிறது…
— K.Annamalai (@annamalai_k) July 6, 2023
லேட்டஸ்ட் செய்திகள்
நடிகை சரோஜா தேவி காலமானார்! சோகத்தில் ரசிகர்கள்!
July 14, 2025
“கணவரைப் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளேன்”…வேதனையில் பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால்!
July 14, 2025
தூக்குத் தண்டனை விவகாரம் : ஏமனில் கேரள நர்ஸ் பிழைப்பாரா? மனுவை விசாரிக்கும் உச்சநீதிமன்றம்!
July 14, 2025
உக்ரைனுக்கு ஏவுகணை கொடுப்போம்..ஆனா செலவு அமெரிக்கா ஏற்காது! டொனால்ட் டிரம்ப் திட்டவட்டம்!
July 14, 2025