கல்வி மேம்பாட்டிற்காக மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் – அன்பில் மகேஷ்

கல்வி மேம்பாட்டிற்காக மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு.
TEALS(Technical Education And Learning Support) எனும் திட்டத்தை செயல்படுத்தும் நோக்கில் கல்வி மேம்பாட்டிற்காக மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் அமைச்சர் அன்பில் மகேஷ் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
இதுகுறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி தொடர் முயற்சிகளின் பலனாக இந்தியாவிலேயே முதன்முறையாக கல்வி மேம்பாட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து கையெழுத்திட்டுள்ளோம்.
TEALS(Technical Education And Learning Support) எனும் திட்டத்தை செயல்படுத்தும் நோக்கில் வரலாற்று சிறப்புமிக்க இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. தமிழ்நாட்டின் கிராம பகுதிகளைச் சேர்ந்த மாணவச் செல்வங்களுக்கு அனைத்து தொழில்நுட்பம் சார்ந்த புரிதலும் சென்றடைய TEALS திட்டம் செயல்படுத்தப்படும். முதல்கட்டமாக 13 பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு 3800 மாணவர்கள் பயன்பெறும் வகையில் TEALS திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
கிராமபுற மாணவர்களின் அறிவியல் திறனில் மிகப்பெரிய வளர்ச்சியை ஏற்படுத்த போகும் இத்திட்டம் அனைவராலும் பாராட்டப்படும் என மிகுந்த நம்பிக்கை கொண்டிருக்கிறோம். மற்ற நாட்டின் மாணவர்களுக்கு இணையான கற்றல் தொழில்நுட்பத்தை நமது மாணவர்களுக்கும் உருவாக்குவோம்!’என பதிவிட்டுள்ளார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி தொடர் முயற்சிகளின் பலனாக இந்தியாவிலேயே முதன்முறையாக கல்வி மேம்பாட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மைக்ரோசாப்ட் @Microsoft நிறுவனத்துடன் இணைந்து கையெழுத்திட்டுள்ளோம்.
TEALS(Technical Education And Learning… https://t.co/E47JuXWYTl pic.twitter.com/ILyZTQHyWZ
— Anbil Mahesh (@Anbil_Mahesh) July 7, 2023