“ஆளுநருக்கு எப்படி உத்தரவிட முடியும்?” – ஐகோர்ட் கேள்வி

ஆளுநருக்கு உத்தரவு பிறப்பித்தது போன்ற தீர்ப்புகள் இருந்தால் தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கும் உத்தரவை நிறுத்தி வைத்ததை எதிர்த்த வழக்கில் ஆளுநருக்கு எப்படி உத்தரவிட முடியும் என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. செந்தில் பாலாஜியை அமைச்சர் பதிவில் இருந்து நீக்கும் உத்தரவை ஆளுநர் நிறுத்தி வைத்ததை ரத்து செய்யக்கோரி வழக்கறிஞர் எம்எல் ரவி வழக்கு தொடர்ந்திருந்தார்.
வழக்குகள் தொடர்பான தீர்ப்புகளை தாக்கல் செய்ய மனுதாரர் தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதாவது, ஆளுநருக்கு உத்தரவிட முடியும் எனக் கூறும் தீர்ப்புகள் இருந்தால் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்து தலைமை நீதிபதி அமர்வு. அமைச்சரை நீக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ளபோதும், அந்த உத்தரவை நிறுத்தி வைக்க அதிகாரமில்லை என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பதால் மனுதாரர் எவ்விதத்தில் பாதிக்கப்படுகிறார்? எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.