நானும் முன்னாள் காவல் அதிகாரி என்பதால் கூடுதல் கவலை.. டிஐஜி தற்கொலை குறித்து அண்ணாமலை பேட்டி

டிஐஜி விஜயகுமார் தற்கொலை தொடர்பாக விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வேண்டும் என அண்ணாமலை கோரிக்கை.
கோவையில் சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, டிஐஜி இப்போது நம்மிடம் இல்லை என்பது துக்கமளிக்கிறது. நானும் முன்னாள் காவல் அதிகாரி என்பதால் கூடுதல் கவலை அளிக்கிறது. நல்ல நேர்மையான, அதிகாரியாக பணி செய்தவர்.
காவல்துறையில் அடிமட்டத்தில் உட்சபடச்ச மன அழுத்தம் உள்ளது. உயர் அதிகாரிகளுக்கு வேறு விதமான மன அழுத்தம் உள்ளது. தமிழ்நாட்டில் முதல் முறையாக இப்படி தற்கொலையை பார்க்கிறோம். டிஐஜி விஜயகுமார் தற்கொலை தொடர்பாக விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
மேலும், நீதிமன்ற மேற்பார்வையில் சிறப்புக்குழு அமைத்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும். அதன்படி, டிஐஜி விஜயகுமார் தற்கொலையை அனைத்து கோணங்களிலும் ஆராய வேண்டும். தற்கொலைக்கு முன்பு எந்த காவல்துறை உயர் அதிகாரியிடம் பேசினார் என்பதை விசாரிக்க வேண்டும். டிஐஜி விஜயகுமார் குடும்பத்தில் ஒருவருக்கு குரூப் ஏ பிரிவில் பணி வழங்க வேண்டும் என கூறினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
நடிகை சரோஜா தேவி காலமானார்! சோகத்தில் ரசிகர்கள்!
July 14, 2025
“கணவரைப் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளேன்”…வேதனையில் பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால்!
July 14, 2025
தூக்குத் தண்டனை விவகாரம் : ஏமனில் கேரள நர்ஸ் பிழைப்பாரா? மனுவை விசாரிக்கும் உச்சநீதிமன்றம்!
July 14, 2025
உக்ரைனுக்கு ஏவுகணை கொடுப்போம்..ஆனா செலவு அமெரிக்கா ஏற்காது! டொனால்ட் டிரம்ப் திட்டவட்டம்!
July 14, 2025