IND vs WI: டாஸ் வென்ற மேற்கிந்திய தீவு அணி முதலில் பேட்டிங் தேர்வு.!

INDvsWI231sttest

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவு அணி முதலில் பேட்டிங் தேர்வு.

மேற்கிந்திய தீவுக்கு   சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கிடையே டாமினிகா மைதானத்தில் இன்று முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியிருக்கிறது. கேப்டன் ரோஹித் தலைமையில் இந்திய அணியும், கிரைக் ப்ராத்வைட் தலைமையில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் களமிறங்குகிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25க்கான கால அட்டவணையின் முதல் டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் இன்று களமிறங்குகின்றன. டெஸ்ட் வரலாற்றை பார்க்கும் போது இந்தியாவை விட வெஸ்ட் இண்டீஸ் அணியே அதிகமுறை வெற்றி பெற்றிருக்கிறது என்றாலும், கடைசியாக வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடந்த 5 டெஸ்ட் தொடர்களில் இந்திய அணியே வென்றுள்ளது.

கடைசியாக நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல், தோல்விக்கு பிறகு இந்திய அணியில் அதிரடியாக புஜாரா, உமேஷ் யாதவ் நீக்கப்பட்டது, மற்றும் ஜெய்ஸ்வாலுக்கு இன்றைய ஆடும் 11இல் வாய்ப்பு போன்றவை முக்கியமாக பார்க்கப்படுகிறது.

டாஸ் வென்ற இந்திய மேற்கிந்திய தீவு அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

இந்தியா (பிளேயிங் லெவன்):

ரோஹித் சர்மா,யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மான் கில், விராட் கோலி, அஜிங்க்யா ரஹானே, ரவீந்திர ஜடேஜா, இஷான் கிஷன், ரவிச்சந்திரன் அஷ்வின், ஷர்துல் தாக்கூர், ஜெய்தேவ் உனத்கட், முகமது சிராஜ்

மேற்கிந்திய தீவுகள் (பிளேயிங் லெவன்):

கிரேக் பிராத்வைட், டேகனரைன் சந்தர்பால், ரேமன் ரைஃபர், ஜெர்மைன் பிளாக்வுட், அலிக் அதானாஸ், ஜோசுவா டா சில்வா, ஜேசன் ஹோல்டர், ரஹ்கீம் கார்ன்வால், அல்ஸாரி ஜோசப், கெமர் ரோச், ஜோமெல் வாரிக்கன்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்