பாஜக அண்ணாமலை திடீர் டெல்லி பயணம்!

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இன்று காலை 7 மணிக்கு திடீரென டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை திடீரென டெல்லிக்கு சென்றுள்ளார். டெல்லியில் பாஜக தலைவர்களை சந்தித்து ஆலோசனை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, ஆளுநர் ஆர்.என்.ரவி 5 நாள் பயணமாக டெல்லி சென்று, அங்கு மத்திய அமைச்சார் அமித்ஷா, மத்திய அரசு வழக்கறிஞர் உள்ளிட்டோரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்புகளை முடித்துக்கொண்டு நேற்று இரவு தான் ஆளுநர் ரவி தமிழ்நாடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.