ஆர்எஸ்எஸ் கூட்டம்! ஒரு வாரம் விடுமுறை அளித்த தனியார் பள்ளி.. எச்சரிக்கை விடுத்த கல்வி அலுவலர்!

ஒரு வாரம் விடுமுறை அளித்தது குறித்து தனியார் பள்ளிக்கு மாவட்ட கல்வி அலுவலர் நோட்டீஸ்.
உதகையில் ஆர்எஸ்எஸ் ஆலோசனை கூட்டம் நடத்த ஒரு வாரம் (7 நாட்கள்) விடுமுறை அளித்த தனியார் பள்ளி நிர்வாகத்துக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எச்சரிக்கை விடுத்தது நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
பள்ளிக்கு ஒரு வாரம் விடுமுறை அளித்தது தொடர்பாக பள்ளி நிர்வாகம் விளக்கமளிக்க மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். பள்ளி நிர்வாகம் தகுந்த விளக்கம் தரவில்லை எனில் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தனியார் பள்ளி நிர்வாகத்திற்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.