தகவல் தொழில்நுட்ப கட்டடத்தை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

தமிழக முதல்வர் மதுரையில் வடபழஞ்சியில் பின்னாக்கிள் இன்போடெக் சொல்யூஷன்ஸ் தகவல் தொழில்நுட்ப கட்டடத்தை திறந்து வைத்தார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், மதுரையில் வடபழஞ்சியில் பின்னாக்கிள் இன்போடெக் சொல்யூஷன்ஸ் தகவல் தொழில்நுட்ப கட்டடத்தை திறந்து வைத்தார். சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் தகவல் தொழில்நுட்ப கட்டடத்தை திறந்து வைத்தார்.
இன்போடெக் சார்பில் 1.80 லட்சம் சதுர அடியில் ரூ.120 கோடி மதிப்பில் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. தற்போது 950 பேருக்கு பணி வழங்கப்பட்டுள்ள நிலையில் 2025க்குள் 6 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிகழ்வில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பின்னாக்கிள் போன்ற நிறுவனங்கள் தென் மாவட்டங்களில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும். மதுரையில் அமையும் இம்மையம் தென் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாமகவின் தலைமை நிர்வாகக் குழுவிலிருந்து அன்புமணியை நீக்கி ராமதாஸ்! எம்எல்ஏ அருளுக்கு இடம்!
July 6, 2025
”இந்தி படித்தால் வேலை கிடைக்கும் எனக்கூறும் அப்பாவிகள் இனியாவது திருந்த வேண்டும்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!
July 5, 2025
12 நாடுகளுக்கான வரிக் கடிதங்கள்.., ஜூலை 7 ஆம் தேதி வெளியிடப்படும் – அமெரிக்க அதிபர் டிரம்ப்.!
July 5, 2025
ஜூலை 15இல் உங்களுடன் முதல்வர் திட்டம் தொடக்கம்.!
July 5, 2025