வார தொடக்க நாளில் சரிவடைந்த தங்கம் விலை! இன்றைய நிலவரம் என்ன.?

தங்கத்தை நகைகளாக அணிவது மட்டுமல்லாமல் அதில் முதலீடு செய்து தேவையான நேரத்தில் அதனை பயன்படுத்திக் கொள்கின்றனர். இத்தகைய தன்மை கொண்ட தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கத்தை கண்டு வருகிறது. அந்த வகையில், கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது.
சென்னையில் கடந்த நான்கு நாட்களாக தங்கத்தின் விலை உயர்ந்து வரும் நிலையில், நேற்று சவரனுக்கு ரூ.40 அதிகரித்து, ரூ.44,400-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், வார தொடக்கநாளான இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,546 -க்கும், ஒரு சவரன் ரூ.44,288-க்கும் விற்பனையாகி வருகிறது. 30 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.81.50-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.81,500 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
உச்சநீதிமன்ற அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பிய குடியரசுத் தலைவர்.., முதல்வர் ஸ்டாலின் கண்டனம்.!
May 15, 2025
இந்தியா பயப்படாது…அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு பதிலடி தான்” அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!
May 15, 2025