உலக நாடுகள் எதிர்ப்பை மீறிய வடகொரியா..! 2 ஏவுகணைகளை விண்ணில் செலுத்தி சோதனை..!

வடகொரியா இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை விண்ணில் செலுத்தி சோதனை மேற்கொண்டுள்ளது.
தென் கொரியாவில் அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பலை அமெரிக்கா நிலைநிறுத்தியுள்ள நிலையில், வட கொரியா ராணுவம் தனது கிழக்குக் கடலில் இரண்டு குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை விண்ணில் செலுத்தி சோதனை மேற்கொண்டுள்ளது.
ஐநா சபை மற்றும் உலக நாடுகள் எதிர்ப்பை மீறி பாலிஸ்டிக் ஏவுகணைகளை சோதனையை வடகொரியா தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அமெரிக்கா மற்றும் தென்கொரியா ராணுவத்தினர் இணைந்து போர் பயிற்சிகள் மேற்கொண்டு வருவது வடகொரியாவை கோபமடைய வைத்துள்ளது.
இந்நிலையில், அதிகாலை 3.30 முதல் 3.46 வரை வட கொரியா தலைநகர் பியாங்யாங்கிற்கு அருகிலுள்ள பகுதியில் இருந்து இந்த ஏவுகணை சோதனை மேற்கொண்டுள்ளது. இந்த ஏவுகணைகள் கொரிய தீபகற்பத்திற்கும் ஜப்பானுக்கும் இடையே உள்ள கடலில் விழுந்துள்ளது. வடகொரியாவின் இந்த ஏவுகணை சோதனை, கொரியா முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.