மணிப்பூரில் தடை நீக்கம்; நிபந்தனைகளுடன் மீண்டும் இணையதள சேவை; அரசு அறிவிப்பு.!

Manipur internet use

மணிப்பூரில் கடந்த மே மாதம் முதல் விதிக்கப்பட்டிருந்த இணையதள சேவைக்கான தடை நீக்கப்பட்டுள்ளது.

மணிப்பூரில் கடந்த மே மாதம் இரு பிரிவினருக்கு இடையே நடந்த கலவரத்தால், அங்கு பதற்றமான சூழல் நிலவி வந்ததால் மாநிலம் முழுவதும் இணையதள சேவை முற்றிலுமாக தடை செய்வதாக அரசு அறிவித்தது. மெய்தி இன மக்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்குவது தொடர்பாக குக்கி மற்றும் மெய்தி இன மக்களிடையே வெடித்த மோதல் கலவரமாக மாறியது.

இந்த கலவரத்தால் இதுவரை 110 க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கலவரத்தை தூண்டும் வகையில் சமூகவலைத்தளத்தில் கருத்துகள் பதிவிடுவது, என மோதலை மேலும் தீவிரப்படுத்துவது போன்றவற்றை தடுப்பதற்கு இணையதள சேவை தடைசெய்யப்பட்டது.

manipur net
manipur net [Image-ani]
manipur net2
manipur net2 [Image-ani]

இந்த நிலையில் இன்று மணிப்பூர் மாநில அரசு, விதித்த இணையதள சேவை தடையை நீக்கியுள்ளது. மேலும் நிபந்தனைகளுடன் கூடிய இணையதள சேவைக்கான தடையை அரசு நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்