மகிழ்ச்சியில் விவசாயிகள்..! தமிழகம் வந்தடைந்தது கர்நாடகா அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர்…!

கர்நாடகா அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் தமிழ்நாடு வந்தடைந்தததால் விவசாயிகள் மகிழ்ச்சி.
கர்நாடகா அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் தமிழ்நாடு வந்தடைந்தது. இதனால் விவசாய பெருமக்கள் பெரும் மகிழ்ச்சிக்குள்ளாகியுள்ளனர். இன்று காலை 1000 கன அடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.
அதன்படி, பகல் 3 மணி நிலவரப்படி தமிழ்நாடு – கர்நாடகா எல்லையான பிலிகுண்டு வழியாக ஒகேனக்கலுக்கு வினாடிக்கு 2000 கன அடியாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது; மேலும் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கபினி