சிரமத்திற்கு ஆழ்ந்த வருத்தம்! மீண்டும் தொடங்கியது IRCTC இணையதளம் சேவை!

ஐஆர்சிடிசி இணையதளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டது என அறிவிப்பு.

IRCTC

ஐஆர்சிடிசி இணையதளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டது என அறிவிப்பு.

இந்தியாவில் உள்ள ரயில் பயணிகளுக்கு ஐஆர்சிடிசி இணையதளம் சேவை மிக முக்கியமானதாகும். ரயிலில் பயணிக்க டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யவும், அதன்படி டிக்கெட்டுகளின் நிலை குறித்து அறியவும் இந்த ஐஆர்சிடிசி இணையதளம் பெரிதும் உதவி வருகிறது. இந்த சமயத்தில் ரயிலில் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்யும் ஐஆர்சிடிசி (IRCTC) இணையதளம் இன்று காலை 10 மணி முதல் திடீரென முடங்கியது. இதனால், பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டது.

ரயிலில் பயணம் செய்ய விரும்புவோர், தட்கல் முறையில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமலும் அவதிக்குள்ளானர். இது தொடர்பாக ஐஆர்சிடிசி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தது. தொழில்நுட்பக்கோளாறு காரணமாக ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் முடங்கியுள்ளது. தொழில்நுட்பக்குழு இந்த பிரச்சனையை தீர்த்து வருவதாகவும், விரைவில் இதனை சரிசெய்துவிட்டு பயணிகளுக்கு தெரிவிக்கப்படும் என தெரிவித்திருந்தது.

மேலும், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் மற்றும் செயலி தற்காலிகமாக இயங்கவில்லை என்பதால் அதற்கு மாற்று ஏற்பாடாக அமேசான், மேக் மை டிரிப், உள்ளிட்ட இணையதளம் மற்றும் செயலி வழியாகவும், இ-வால்லெட் என்ற வசதியையும் பயன்படுத்தி பொதுமக்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் எனவும் கூறியிருந்தது. அதுமட்டுமல்லாமல் தொழில்நுட்பக் கோளாறை சரிசெய்யும் பணிகளில் நடைபெற்று வருவதாகவும் கூறியிருந்தது.

இந்த நிலையில், ஐஆர்சிடிசி இணையதளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக ஐஆர்சிடிசி ட்விட்டர் பதிவில், தொழில்நுட்ப கோளாறு பிரச்னையை சரி செய்துவிட்டதாகவும் முன்பதிவு வசதி மீண்டும் தொடங்கியிருப்பதாகவும் ஐஆர்சிடிசி அறிவித்துள்ளது.

எனவே, முன்பதிவு பிரச்சனை தற்போது தீர்க்கப்பட்டுள்ளது.https://irctc.co.in/nget/train-searchமற்றும் Rail connect ஆப்ஸ் இப்போது வேலை செய்கிறது என்றும் ஐஆர்சிடிசி இணையதளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் மக்கள் சிரமத்திற்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியதை தொடர்ந்து, பயணிகளின் வசதிக்காக, ரயில் நிலையங்களில் கூடுதல் முன்பதிவு கவுண்டர்கள் திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

unknown node