#BREAKING: திமுக நிர்வாகி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

திண்டுக்கல் மாவட்டத்தில் வேடச்சந்தூரில் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் சாமிநாதன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரியைகள் சோதனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. செந்தில் பாலாஜிக்காக 25க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் டாஸ்மாக் பார்களில் பணம் வசூலித்த புகாரின் பேரில் திமுக நிர்வாகி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் சாமிநாதனின் வீடு மற்றும் அலுவலங்களில் 7க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே, திமுகவில் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள் என பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி இருந்தது.
இதன்பின், சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்பு சட்டத்தில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இவரை தொடர்ந்து, அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி அவரிடமும், அவரின் மகனிடமும் விசாரணை நடத்தியிருந்தனர். இந்த நிலையில், திமுக நிர்வாகி வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
நாளை மறுநாள் இந்தியா கூட்டணி தலைவர்கள் கூட்டம்.!
July 18, 2025
நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மிக கனமழை எச்சரிக்கை.!
July 18, 2025
“தமிழ்நாட்டின் ஒருமித்த குரலை நாடாளுமன்றத்தில் எடுத்து வைக்க வேண்டும்” – மு.க.ஸ்டாலின் அறிவுரை.!
July 18, 2025
ஒரே ஆண்டில் இவ்வளவு வருமானமா? கோடிகளை அள்ளிய பிசிசிஐ!
July 18, 2025