போதைப்பொருள் கடத்தல் வழக்கு..! சிங்கப்பூரில் 2 வாரத்தில் 3வது கைதிக்கு தூக்கு தண்டனை..!

சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக இரண்டு வாரங்களில் மூன்றாவது கைதிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. சிங்கப்பூரின் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினாரால் முகமது ஷல்லே அப்துல் என்பவர் 54 கிராம் (1.9 அவுன்ஸ்) ஹெராயின் கடத்தியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்பின் சிங்கப்பூரின் சாங்கி சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. சிங்கப்பூரின் சட்டத்திட்டங்கள் படி, 500 கிராம் (17.6 அவுன்ஸ்) கஞ்சா மற்றும் 15 கிராம் (0.5 அவுன்ஸ்) ஹெராயின் கடத்தல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை என்பது கட்டாயமான ஒன்றாக உள்ளது.
இதனால் மனித உரிமைக் குழுக்கள், சர்வதேச ஆர்வலர்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை, போதைப்பொருள் குற்றங்களுக்கான மரணதண்டனையை நிறுத்துமாறு சிங்கப்பூரை வலியுறுத்தியுள்ளன. ஆனால் அதனை அரசாங்கம் மறுத்து வந்த நிலையில், தற்போது மீண்டும் மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது.
மேலும், போதைப்பொருள் தேவை மற்றும் விநியோகத்தை நிறுத்துவதற்கு மரண தண்டனை முக்கியம் என்று சிங்கப்பூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், கடந்த வாரம் 45 வயதான சரிதேவி டிஜமானி என்ற பெண்ணும், 56 வயதான முகமது அஜீஸ் ஹுசைன் என்பவரும் தூக்கிலிடப்பட்டனர். இந்த ஆண்டு தூக்கிலிடப்பட்ட ஐந்தாவது நபர் முகமது ஷல்லே என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
நடிகை சரோஜா தேவி மறைவு : நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்!
July 14, 2025
நடிகை சரோஜா தேவி காலமானார்! சோகத்தில் ரசிகர்கள்!
July 14, 2025
“கணவரைப் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளேன்”…வேதனையில் பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால்!
July 14, 2025