பள்ளியில் நடைபெற்ற ரிலே பந்தயத்தில் கலந்து கொண்ட மாணவன் மாரடைப்பால் உயிரிழப்பு..!

death

கர்நாடக மாநிலம் துமாக்கூர் மாவட்டத்தில் 15 வயது சிறுவன் பீமா சங்கர் என்பவர் பள்ளிகளுக்கு இடையிலான ரிலே பந்தயத்தில் கலந்து கொண்டார். இந்த பந்தய போட்டியில் இரண்டாவது இடத்தை பிடித்த இவருக்கு சில நிமிடங்களிலேயே மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இருப்பினும் அவர் உயிர் பிழைக்கவில்லை. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவன் மாரடைப்பால் உயிரிழந்ததாக  தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்