#BREAKING : அமைச்சர் செந்தில் பாலாஜியை 5 நாட்கள் காவலில் எடுத்தது அமலாக்கத்துறை..!

அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் இன்று காலை அனுமதி வழங்கிய நிலையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனுத் தாக்கல் செய்தது. செந்தில் பாலாஜி தற்போது நீதிமன்ற காவலில் புழல் சிறையில் இருக்கும் நிலையில், அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மனு தாக்கல் செய்திருந்தது.
அமலாத்துறையின் மனு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில் பாலாஜியை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாத்துறைக்கு அனுமதி வழங்கி உத்தரவிடப்பட்டது. நீதீர்மன்ற உத்தரவையடுத்து, செந்தில் பாலாஜியை உடனே காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை அதிகாரிகள் புழல் சிறைக்கு சென்றுள்ளனர்.
கும்மிடிப்பூண்டி அல்லது சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், அமலாக்கத்துறை புழல் சிறையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜியை, 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிப்பதற்காக பலத்த பாதுகாப்புடன் நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றது.
லேட்டஸ்ட் செய்திகள்
புதுச்சேரியில் புதிதாக 3 நியமன எம்எல்ஏக்கள் அறிவிப்பு.!
July 11, 2025
பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 31 நாள்களுக்கு ரோப் கார் இயங்காது – நிர்வாகம் அறிவிப்பு.!
July 11, 2025
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள்.., இந்தியாவை மிரட்டிய இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் அவுட்.!
July 11, 2025
”லோகேஷ் மீது கோவமாக உள்ளேன்” – நடிகர் சஞ்சய் தத்.!
July 11, 2025