இன்ஸ்டாகிராம் லைவில் முன்னாள் மனைவி மற்றும் மகனை கொலை செய்த பாடி பில்டர்!

இன்ஸ்டாகிராமில் லைவ் போட்டு முன்னாள் மனைவி மற்றும் மகனை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொஸ்னியாவில் பாடி பில்டர் ஒருவர் தனது முன்னாள் மனைவியை இன்ஸ்டாகிராமில் லைவ் ஸ்ட்ரீமிங் செய்து துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளார். பின்னர், தப்பி ஓடிய தனது மகனையும் மேலும் ஒரு நபரையும் கொலை செய்திருக்கிறார்.
வடகிழக்கு போஸ்னிய நகரமான Gradacac-ல் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது தெரிய வந்துள்ளது. மேலும், அங்கு தாக்குதல் நடத்திய பாடி பில்டர், நகரத்தில் உலா வந்த மேலும் மூன்று நபரை காயப்படுத்தியுள்ளார்.
இதனை தொடர்ந்து, போலீசார் அவரை கைது செய்யப்படுவதற்கு முன்பும் தன்னை தானே தற்கொலை செய்துகொண்டார் என்று அந்நாட்டு நகர காவல்துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் அந்நாட்டு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.