வயநாட்டில் புதிதாக கட்டப்பட்ட வீடுகளின் சாவியை வழங்கினார் எம்.பி. ராகுல்காந்தி..!

மோடி என்ற பெயர் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக பதிவான அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு, இதனால், அவரின் எம்பி பதவி பறிக்கப்பட்ட நிலையில், உச்சநீதிமன்றத்தில், தனக்கு விதித்த இரண்டு ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து, ராகுல்காந்தி மீண்டும் எம்.பி-யாக தொடர்வார் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று ராகுல்காந்தி அவரது வயநாடு தொகுதிக்கு சென்றார்.
அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில், அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், எங்கும் ரத்தம், எங்கும் கொலை, எங்கும் பலாத்காரம். மணிப்பூரில் இதுதான் நிலை, நாடாளுமன்றத்தில் பிரதமர் 2 மணி, 13 நிமிடங்கள் பேசினார். இதில், பிரதமர் மோடி நகைச்சுவையாக பேசினார். மணிப்பூரில் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நான் மணிப்பூர் சென்றிருந்தேன். 19 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன், மணிப்பூரில் நான் அனுபவித்ததை நான் ஒருபோதும் அனுபவிக்கவில்லை என தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வில், கேரளாவின் வயநாட்டில் மழை வெள்ளத்தில் வீட்டை இழந்தவர்களுக்கு புதிதாக கட்டப்பட்ட வீடுகளின் சாவியை வழங்கினார்.