நாங்குநேரி சம்பவம் – சம்பவத்தை நேரில் பார்த்து அதிர்ச்சியில் இறந்தவர் குடும்பத்திற்கு முதல்வர் நிதி..!

Tamilnadu CM MK Stalin

முதல்வர் மு.க.ஸ்டாலின் திருநெல்வேலி மாவட்டம் நான்குநேரி சம்பவத்தை நேரில் பார்த்து மாரடைப்பால் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, நிதியுதவி வழங்கியுள்ளார்.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ‘திருநெல்வேலி மாவட்டம், நான்குநேரி வட்டம் மற்றும் கிராமத்தைச் சேர்ந்த திருமதி.அம்பிகா என்பவரது மகன் சின்னத்துரை மற்றும் மகள் சந்திரா செல்வி ஆகிய இருவரையும் கடந்த 9-8-2023 அன்று அரிவாளால் தாக்கப்பட்ட சம்பவத்தை நேரில் பார்த்த அவர்களது உறவினர் திரு கிருஷ்ணன் த/பெ சுடலைமுத்து (வயது 59) செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

என்பவர் அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் என்ற துயரமான
உயிரிழந்த திரு கிருஷ்ணன் அவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு உயிரிழந்தவரின் குடும்ப சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரணநிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.’ என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்