மாதுளை பழத்தை சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுவர். இந்த பழத்தை பிடிக்காதவர்கள் என்று யாருமே இருக்க மாட்டார்கள். மாதுளை பழத்தில் பல வகையான உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய ஊட்டச்சத்துக்கள் உள்ளது. அதேபோல் மாதுளை பழத்தின் தோலிலும் அதிகமான சத்துக்கள் உள்ளது.
நமது வீடுகளில் மாதுளை பழத்தை சாப்பிட்ட பின் அதன் தோல்களை உபயோகமற்றது போல தூக்கி எறிந்து விடுகிறோம். ஆனால் இந்த பழத்தின் தோல்களில் பலவகையான நன்மைகள் உள்ளது. தற்போது இந்த பதிவில் மாதுளை பழத்தூரில் உள்ள நன்மைகள் பற்றி பார்ப்போம்.
பற்களின் ஆரோக்கியம்
mouth [Imagesource : Indianexpress]நாம் பயன்படுத்தும் பல்பொடிகள் மற்றும் பேஸ்டுகளில் மாதுளை தோல் மிகவும் முக்கியமான பங்கு வகிக்கிறது. ஏனென்றால் மாதுளையின் தோல் வாய்வழி சுகாதாரத்தை பராமரிப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. மாதுளை தோலை காயவைத்து அதனை தூளாக்கி அதனை தண்ணீரில் கலந்து வாய் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் நீங்குவதோடு, உங்கள் பற்களின் ஆரோக்கியத்தையும் அது பாதுகாக்கிறது.
சரும ஆரோக்கியம்
பொதுவாக நம்மில் பெரும்பாலானோர் நமது சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த பல வகையான கெமிக்கல் கலந்த கிரீம்கள் மற்றும் பொருட்களை உபயோகிக்கிறோம். இதனால் பல பக்க விளைவுகள் ஏற்படுகிறது. ஆனால் நாம் இயற்கையான முறையில் பயன்படுத்தும் எந்த ஒரு பொருளும் நமக்கு பக்கவிளைவை ஏற்படுத்துவதில்லை.
facebeauty [Imagesource – Representative]அந்த வகையில் மாதுளை பழ தோல் சரும ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் முக்கிய வைக்கிறது. மாதுளை பழத்தோலை சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக பயன்படுத்தினால், உங்கள் சருமம் இளமையாகவும் பொலிவுடன் காணப்படும். மாதுளை தோலில் ஆன்டிவைரல், ஆன்டிபாக்டீரியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு குணங்கள் உள்ளன. தோலில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நோய்கள் மற்றும் பாக்டீரியாக்களுக்கு எதிராக பாதுகாக்க உதவுகிறது.
எலும்புகளின் ஆரோக்கியம்
pain [Imagesource : Representative]நமது உடலில் உள்ள எலும்புகளில் ஏதாவது ஒரு எலும்பு பாதிக்கப்பட்டாலும் நமது உடல் ஆரோக்கியம் தடைபடும். அந்த வகையில் நமது எலும்புகளை வலுப்படுத்துவதற்கும், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் பயன்படுகிறது. மாதுளை தோலில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அலர்ஜி எதிர்ப்பு குணங்கள் காணப்படுகிறது. எலும்பு ஆரோக்கியத்திற்கு மாதுளை பழத்தின் தோளிலிருந்து தயாரிக்கப்படும் பொடியை அல்லது உணவுப் பொருட்களை உட்கொண்டு வந்தால் நமது எலும்புகள் உறுதியடைவதோடு உடல் ஆரோக்கியமும் மேம்படுகிறது.
முடி பிரச்சனை
hairoil [Imagesource : Timesofindia]பெண்களுக்கு அழகே அவர்களின் முடி தான். அந்த வகையில், முடியின் ஆரோக்கியத்தை பராமரிப்பதில் மாதுளை தோல் முக்கிய பங்கு வகிக்கிறது. மாதுளை தோலைப் பொடி செய்து, நீங்கள் தலைக்கு தேய்க்கும் எண்ணெயுடன் சேர்த்து தேய்த்தால், பொடுகுத் தொல்லையைத் தடுக்கவும், முடி உதிர்தலுக்கு எதிராகவும் செயல்படும். இதனை இரண்டு மணி நேரம் தேய்த்து வைத்திருந்த பின், குளிக்கலாம்.