India – Bharat : புரியாத ஹிந்தி பெயர்கள்.. இந்தியர்கள் மனது புண்படுகிறது.! திமுக எம்பி கனிமொழி பேட்டி.! 

DMK MP Kanimozhi

வரும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்காக காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 28 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. இந்த எதிர்க்கட்சிகள் கூட்டமைப்பிற்கு  ‘இந்தியா (I.N.D.I.A)’ என பெயர் வைத்து செயல்பட்டு வருகின்றனர்.

எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு இந்தியா (I.N.D.I.A) என இந்திய நாட்டின் பெயர் வரும்படி பெயர் வைக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து இந்தியா என்ற பெயரை ஆளும் பாஜக அரசு தவிர்த்து வருகிறது என மத்திய அரசின் அடுத்தடுத்த நடவடிக்கைகளில் தெளிவாக வெளிப்படுகிறது.

தற்போது இந்தியா எனும் பெயருக்கு பதில் பாரத் எனும் பெயரை குறிப்பிட வேண்டும் என்ற குரல் பாஜக ஆதரவாளர்களின் ஒருமித்த குரலாக மாறி வருகிறது. ஜி20 மாநாட்டுக்கான குடியரசு தலைவருக்கு கொடுத்த அழைப்பிதழில் பாரத குடியரசு தலைவர் என குறிப்பிட்டனர். ஏசியன் கூட்ட தொடர் அறிவிப்பில் பாரத பிரதமர் மோடி என குறிப்பிட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வரும் செப்டம்பர் 18ஆம் தேதி கூட உள்ள நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தில் கூட இந்தியாவின் பெயர் பாரதம் என மாற்றம் பெறுவதோ அல்லது மற்ற அரசு குறிப்பேடுகளில் இந்தியாவின் பெயருக்கு பதிலாக பாரதம் என குறிக்கும் வகையில் சொல் மாறுவது பற்றிய தீர்மானங்களோ நிறைவேற்றப்படலாம் என கூறப்படும் வேளையில்,  இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
இந்தியா என்ற பெயர் பாரதம் என மாற்றும் செயல்முறைகள் குறித்து திமுக எம்பி கனிமொழி சென்னை எழும்பூரில் செய்தியாளர்கள் மத்தியில் பேசுகையில், பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைவரும் இந்தியா என ஒரே தளத்தில் நிற்கிறோம். இந்தியா எனும் அந்த பெயரே தற்போது பாஜகவுக்கு அச்சத்தை உண்டாகியுள்ளது.
அதனால் தான் நாட்டின் பெயரையே மாற்ற நினைக்கிறார்கள். அதற்காக தான் வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் சட்ட மசோதாகொண்டுவரவுள்ளனர் என தெரிகிறது. எல்லா திட்டத்திற்கும் ஹிந்தியில் புரியாதபடி பெயர் வைக்கிறார்கள். இது பெரும்பாலான இந்தியர்களின் மனதை புண்படுத்தி வருகிறது என சென்னை எழும்பூரில் திமுக எம்பி கனிமொழி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்