Vijayakanth : சண்டையே தெரியாமல் அந்த படத்தின் சண்டைக்காட்சியில் நடித்த விஜயகாந்த்! படமோ அதிரி புதிரி ஹிட்!

Vijayakanth

நடிகர் விஜயகாந்தை நடிகராக பலருக்கும் பிடித்த காரணம் என்னவென்றால் அவர் தொடர்ச்சியாக நடிக்க வந்த ஆரம்ப காலகட்டத்தில் இருந்து ஆக்சன் காட்சிகள் மற்றும் ஆக்சன் கதைகள் கொண்ட காதல் திரைப்படங்கள் மற்றும் சென்டிமென்ட் , குடும்ப கதைகளை தேர்ந்தெடுத்ததால் தான். இதில் அவர் நடிக்கும் ஆக்சன் படங்களுக்கென்றே தனி ரசிகர்கள் கூட்டமே உருவானது.

அந்த அளவிற்கு இவர் நடிக்கும் சமயத்தில் டூப்  ஏதும் போடாமல் சண்டைக்காட்சிகளில் நிஜமாகவே நடிப்பார். அதேபோல், இவர் நடிக்கும் சண்டைக் காட்சிகளும் பெரிய அளவில் பேசப்பட்டு வெற்றியடைந்து விடும். இதுவரை இவர் நடித்த பல படங்கள் ஆக்சன்காகவே  ஓடி உள்ளது என்றால் கூட அதில் எந்த ஆச்சரியமும் இல்லை. இந்நிலையில், விஜயகாந்த்  முதன்முதலாக நடித்த திரைப்படத்தில் சண்டை காட்சியை தெரியாமல் அந்த சண்டைக்காட்சியில் நடித்த கதை பற்றி உங்களுக்கு தெரியுமா?

விஜயகாந்த் இனிக்கும் இளமை திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் சுதாகர் முக்கியமான முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். விஜயகாந்த் காட்சிகள் படத்தில் பெரிய அளவில் இல்லாவிட்டாலும் ஒரு சில காட்சிகளில் வருவார் இருப்பினும் அவருடைய காட்சிகளும் பெரிய அளவில் பேசப்பட்டது.

இந்நிலையில், இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது உங்களுக்கு நாடகத்தில் நடித்த அனுபவம் இருக்கிறதா? என இயக்கினார் விஜயகாந்திடம் கேட்டாராம். அதற்கு விஜயகாந்த் இல்லை என கூறினாராம். பிறகு இந்த படத்தில் உங்களுக்கு சண்டை காட்சிகள் இருக்கிறது இதில் நடித்த அனுபாவமாவது இருக்கிறதா? என கேட்டுள்ளாராம். அதற்கு தான் ஷூட்டிங்கே பார்த்தது இல்லை என விஜயகாந்த் கூறிவிட்டாராம்.

பிறகு விஜயகாந்திற்கு ஒரு சண்டைகாட்சியை படக்குழு கொடுத்தார்களாம். அது மட்டுமின்றி, விஜயகாந்திற்கு இந்த படத்திலே முதலில் நடிக்க வேண்டியிருந்தது சண்டைக்காட்சிதானாம். பிறகு எப்படி தான் நடிக்க போகிறோம் என்ற கேள்வி அவருக்குள் இருந்ததாம். பின் , சண்டைகாட்சி எடுக்கப்பட்டவுடன் அசத்தலாக நடித்து கொடுத்தாராம். சண்டையே தெரியாமல் அந்த படத்தின் சண்டைக்காட்சியில் நடித்த விஜயகாந்தை படப்பிடிப்பில் இருந்தவர்கள் பாராட்டினார்களாம். இந்த தகவலை பத்திரிகையாளர் எல்விஆதவன் என்பவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இயக்குனர் எம்.ஏ.காஜா இயக்கத்தில் கடந்த 1979-ஆம் ஆண்டில் வெளியான இந்த இனிக்கும் இளமை திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வசூல் ரீதியாக வெற்றிபெற்றது. படத்தில் விஜயகாந்த் மற்றும் சுதாகருடன் வி.கே.ராமசாமி, காந்திமதி, உசிலைமணி, பக்கோடா காதர் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்