‘இந்தியாவில் 2025 செஸ் உலகக் கோப்பை தொடர்’ – FIDE அறிவிப்பு.!

உலகக்கோப்பை செஸ் தொடர் இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் என உலக செஸ் கூட்டமைப்பு (FIDE) அறிவித்துள்ளது.

FIDE World Cup

டெல்லி : 2025 செஸ் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெறும் என சர்வதேச சதுரங்க கூட்டமைப்பு (FIDE) அறிவித்துள்ளது. இந்தப் போட்டி அக்டோபர் 30 முதல் நவம்பர் 2 வரை நடைபெறவுள்ளது, மேலும் இதில் 206 வீரர்கள் ஒற்றை நீக்குதல் (single-elimination) வடிவில் போட்டியிடுவார்கள்.

இந்தத் தொடரில் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் வீரர்கள் 2026-ஆம் ஆண்டு கேண்டிடேட்ஸ் தொடருக்கு தகுதி பெறுவார்கள், இது உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்திற்கு சவாலாகும் வீரரைத் தீர்மானிக்கும். இந்தியாவில் இதற்கு முன்பு 2002-ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் நடைபெற்ற உலகக் கோப்பையை விஸ்வநாதன் ஆனந்த் வென்றார்.

சர்வதேச அரங்கில் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து சாதித்து வரும் நிலையில், உலகக் கோப்பை போட்டி இந்தியாவில் நடப்பது அதற்கு மேலும் மகுடம் சூட்டும் வகையில் அமைந்துள்ளது. நடப்பு உலக சாம்பியனான டி.குகேஷ், 2023 உலகக் கோப்பையின் இரண்டாம் இடத்தைப் பிடித்த ஆர்.பிரக்ஞானந்தா, தற்போது உலக தரவரிசையில் ஐந்தாவது இடத்தில் உள்ள அர்ஜுன் எரிகைசி ஆகியோர் இந்த போட்டியில் பங்கேற்கும் நட்சத்திரங்களில் அடங்குவர்.

இந்த நிகழ்வை நடத்தும் நகரம் பின்னர் வெளியிடப்படும். இந்த முறை, எந்த நகரத்தில் போட்டி நடைபெறும் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஆனால் புது டெல்லி, சென்னை, பெங்களூரு, அல்லது அகமதாபாத் ஆகியவைற்றில் நடத்தப்படும் என என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் கடந்த செப்டம்பரில் 45-வது ‘செஸ் ஒலிம்பியாட்’ நடைபெற்றது கவனிக்கதக்கது. இந்தியா சமீபத்தில் 2022 செஸ் ஒலிம்பியாட், டாடா ஸ்டீல் செஸ் இந்தியா, 2024 உலக ஜூனியர் U20 சாம்பியன்ஷிப் 2024 மற்றும் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற FIDE மகளிர் கிராண்ட் பிரிக்ஸின் 5வது லெக் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்