மேலும் இந்த மாடலின் புகைப்படங்களையும் தகவல்களையும் இந்த செய்தி குறிப்பில் சற்று தெளிவாக காணலாம். இருசக்கர வாகன விற்பனையில் மாஸ் காட்டும் ராயல் எண்ட்பீல்டு நிறுவனம் ஏற்க்கனவே வெளிவந்த தண்டர்பேர்டு 500 எக்ஸ் பைக்கிற்கு கொண்டுவந்துள்ள காவி நிறத்தை அப்படியே தண்டர்பேர்டு 350எக்ஸ் மாடலுக்கு அளிக்கவுள்ளது.ஏற்கனவே வந்த தண்டர்பேர்டு 500எக்ஸ் என்ற மாடலின் தயாரிப்பை இந்நிறுவனம் அடுத்த ஆண்டு முதல் உற்பத்தியை நிறுத்த உள்ளது, எனவே இந்த மாடலின் நிறத்தை அப்படியே தண்டர்பேர்டு 350எக்ஸ் பிஎஸ்6 என்ற புதிய மாடலுக்கு கொடுக்கப்பட உள்ளது.
இந்த புதிய காவி மாடல் வாகனத்தில் 346சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜினுடன் விற்பனையாகி வருகின்ற இந்த தண்டர்பேர்டு 350எக்ஸ் என்ற இந்த மாடல் 5,250 ஆர்பிஎம்-ல் 19.8 பிஎச்பி பவரை கொண்டுள்ளது. மேலும் இந்த மாடல் வாகனம் 4,000 ஆர்பிஎம்-ல் 28 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.மேலும் இந்தமாடல் வாகனம் பிஎஸ்6 தரத்திற்கு தற்போது அப்டேட் செய்யப்படவுள்ளதால் இந்த மாடல் வாகன என்ஜினுடன் 5-ஸ்பீடு ட்ரான்ஸ்மிஷன் அமைப்பு இணைக்கப்படவுள்ளது. இந்த மாடலில் 350சிசி மற்றும் 500சிசி வாகனமான இதில் டிஸ்க் ப்ரேக், கண்ணீர்த்துளி வடிவிலான பெட்ரோல் டேங்க் மற்றும் சில காஸ்மெட்டிக் பாகங்களின் ஒரு சில வேறுபாட்டுடன் அறிமுகமாகியது.
இத்தகைய வசதிகள் நிறைந்த இந்த வாகனம் ப்ரீமியம் விலையில் விற்பனை செய்யப்படுவதால் இளைஞர்களிடையே இந்த மாடல் தற்போது வரை நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் 500சிசி திறனுடன் விற்பனையாகி வரும் புல்லட், தண்டர்பேர்டு மற்றும் கிளாசிக் ஆகிய மாடல்களின் தயாரிப்பு அடுத்த ஆண்டுடன் நிறுத்தப்படுவதற்கு முக்கிய காரணமாக , இந்தியா முழுவதும் அமலாக உள்ள புதிய மாசு உமிழ்வு விதி தான் என்கின்றனர்.
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…