3 நொடியில் 100 கி.மீ ஸ்பீடு.. அசுர வேகத்தில் களமிறங்கிய BMW M 1000 XR.!

Published by
மணிகண்டன்

சென்னை: பிஎம்டபிள்யு ரக புதிய மாடலான எம் 1000 XR மாடல் இந்தியாவில் 45 லட்ச ரூபாய்க்கு களமிறங்கியுள்ளது.

பைக் பிரியர்களால் அதிக கவனம் ஈர்க்கும் அதிவேக திறன் கொண்ட பைக்குகளில் முக்கியமான ஒன்றாக திகழ்கிறது பிஎம்டபிள்யு (BMW). இந்த பைக் மாடலின் 1000 சிசி புது ரக மாடல் தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அட்வெஞ்சர் ரக மாடல் பைக்காக களமிறங்கியுள்ள இந்த பைக்கின் விலை இந்திய மதிப்பில் 45 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை தற்போது தொடங்கப்பட்டாலும், வரும் ஜூன் மாதம் முதல் தான் முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.

999சிசி எஞ்சின் திறன் கொண்ட  BMW M 1000 XR ஆனது, நான்கு இன்லைன் சிலிண்டர் எஞ்சின் திறன் கொண்டு இயக்கப்படுகிறது. இதன் மூலம் 201bhp திறன் மற்றும் 113Nm பவர் வெளிப்படுகிறது. இந்த எஞ்சின் 6-ஸ்பீடு கியர் பாக்ஸ்களை கொண்டுள்ளது.

இப்படியான 999சிசி எஞ்சின் திறன் கொண்டு 100 கி.மீ வேகத்தை வெறும் 3.2 வினாடிகளில் அடைந்துவிடும் என கூறப்பட்டுள்ளது. இதன் அதிகபட்ச ஸ்பீடு 278 கி.மீ ஆகும். இந்த மாடல் பைக்கில் மழை, சாலை, டைனமிக், ரேஸ் மற்றும் ரேஸ் ப்ரோ என ஐந்து விதமாக ஒட்டிக்கொள்ளும் வசதி இந்த பைக்கில் உள்ளது.

6.5 இன்ச் TFT ஸ்கிரீன், ஹீட் கிரிப்ஸ், டைனமிக் பிரேக் கண்ட்ரோல், LED விளக்குகள் போன்ற பல்வேறு வசதிகளை M 1000 XR கொண்டுள்ளது. எந்த அளவு வேகம் இருக்கிறதோ அதே போல பாதுகாப்பு அம்சங்களும் இதில் உள்ளன. இந்த வாகன பிரேக்கிங்கில் இரட்டை முன்பக்கம் 320 மிமீ டிஸ்க்குகள்  மற்றும் பின்பக்கம் 265 மிமீ பின் டிஸ்க்குகள் கொண்டுள்ளன.

மேலும், 45mm அளவுள்ள தலைகீழான முன் போர்க் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் கார்பன் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.  மேலும் பல்வேறும் தொழில்நுட்பங்கள் இதில் பொருத்தப்பட்டு முந்தைய மாடலை விட 3 கிலோ அளவு எடை குறைக்கப்பட்டு இந்த M 1000 XR பைக் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

ஷாக் கொடுத்த பாகிஸ்தான்.,, வாகா எல்லை மீண்டும் மூடல் – மக்கள் தவிப்பு.!

டெல்லி : கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி காஷ்மீர் பகுதி பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…

10 minutes ago

”முஸ்லிம்களையோ அல்லது காஷ்மீரிகளையோ றிவைக்க வேண்டாம்” – தாக்குதலில் கணவரை இழந்த ஹிமான்ஷி.!

ஹரியானா : பஹல்காமில் நடந்த தாக்குதலில் திருமணம் முடிந்து ஆறு நாட்களுக்குப் பிறகு தனது கணவர் பிரிந்த போதிலும், தாக்குதல்…

36 minutes ago

வைபவ் சூர்யவன்ஷி கொடுத்த அதிர்ச்சி.. 2-வது அணியாக வெளியேறியது ராஜஸ்தான்.!

ஜெய்ப்பூர் : நேற்றைய தினம் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பெளலிங் செய்ய முடிவு…

59 minutes ago

சரசரவென சரிந்து தத்தளித்த ராஜஸ்தான்…! 100 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை வெற்றி!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…

9 hours ago

எத்தனை தொழில்நுட்பம் வந்தாலும் மொழி இருக்கும் – கமல்ஹாசன்!

நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், கிரேஸி மோகன் எழுதிய '25 புத்தகங்கள்' வெளியீட்டு விழாவில் இன்று…

10 hours ago

அதிரடியில் அலறவிட்ட மும்பை…திணறிய ராஜஸ்தான்! டார்கெட் இது தான்!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…

11 hours ago