”முஸ்லிம்களையோ அல்லது காஷ்மீரிகளையோ றிவைக்க வேண்டாம்” – தாக்குதலில் கணவரை இழந்த ஹிமான்ஷி.!
முஸ்லிம்கள் அல்லது காஷ்மீரிகளுக்கு எதிராக செல்வதை நாங்கள் விரும்பவில்லை என்று பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த இந்திய கடற்படை லெப்டினன்ட் வினய் நர்வால் மனைவி கூறியுள்ளார்.

ஹரியானா : பஹல்காமில் நடந்த தாக்குதலில் திருமணம் முடிந்து ஆறு நாட்களுக்குப் பிறகு தனது கணவர் பிரிந்த போதிலும், தாக்குதல் விவகாரத்தில் நல்லிணக்கத்தைப் பேணுமாறு ஹிமான்ஷி நர்வால் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலில் இந்திய கடற்படை லெப்டினன்ட் வினய் நர்வால் உட்பட 26 சுற்றுலாப் பயணிகள் கொடூரமாக கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில், முஸ்லிம்களையோ, காஷ்மீரிகளையோ குறிவைக்காதீர்கள் என பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த கடற்படை அதிகாரி வினய் நர்வாலின் மனைவி ஹிமான்ஷி வேண்டுகோள் விடுத்துள்ளார். லெஃப். வினய் நர்வாளின் 27-ஆம் தேதி பிறந்தநாளில் ஹரியானயில்கர்னாலில்இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த முகாமை கர்னாலை தளமாகக் கொண்ட அரசு சாரா நிறுவனமான தேசிய ஒருங்கிணைந்த கலைஞர்கள் மற்றும் ஆர்வலர்கள் மன்றம் ஏற்பாடு செய்தது. இதில், வினய் நர்வாளின் மனைவி ஹிமாஷி நர்வாளும் அவரது குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.
இந்த இரத்த தான முகாமில் செய்தியாளர்களிடம் பேசிய ஹிமான்ஷி, ”ஒட்டுமொத்த இஸ்லாமியர்கள் மற்றும் காஷ்மீரிகளுக்கு எதிராக மக்கள் திரும்புவதை நாங்கள் விரும்பவில்லை, அமைதியை மட்டுமே நாங்கள் விரும்புகிறோம். நிச்சயம் எங்களுக்கு நீதியும் வேண்டும். ஆனால், முஸ்லிம்களுக்கோ அல்லது காஷ்மீரிகளுக்கோ எதிராக மக்கள் நடந்து கொள்வதை நாங்கள் விரும்பவில்லை என்று அவர் கூறினார்.