ரூ.21,000 கோடி சம்பாதித்த இந்திய யூடியூபர்கள்! யூடியூப் CEO தகவல்! 

கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் இந்திய யூடியூபர்கள் ரூ.21 ஆயிரம் கோடி சம்பாதித்துள்ளனர் என யூ-டியூப் CEO நீல் மோகன் தெரிவித்துள்ளார்.

Youtube CEO Neal Mohan

மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு பேசினார். இந்த நிகழ்வில் இந்தியாவின் டிஜிட்டல் துறை வளர்ச்சி பற்றி பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. அப்போது இதில் கலந்து கொண்ட யூ-டியூப் தலைமை செயல் அதிகாரி நீல் மோகன் பல்வேறு சுவாரஷ்ய தகவல்களை தெரிவித்தார்.

மோகன் நீல் பேசுகையில், இந்தியா தற்போது கன்டென்ட் கிரியேட்டர்களின் நாடாக மாறி வருகிறது. இந்திய கிரியேட்டர்களின் புதுபுது வீடியோக்கள் வெளிநாட்டவரை வெகுவாக ஈர்க்கிறது. வெளிநாட்டவர்கள் இதுவரை 4500 மணிநேரம் அளவுக்கு இந்திய யூ-டியூப் சேனல் கன்டென்டை பார்த்துள்ளனர்.

கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் இந்திய யூ-டியூபர்கள் ரூ.21 ஆயிரம் கோடியை வருமானமாக பெற்றுள்ளனர். அடுத்த 2 ஆண்டுகளில் இந்திய யூ-டியூபர்களின் முன்னேற்றம், அவர்கள் கன்டென்டை உலகளவில் பிரபலப்படுத்த ரூ.850 கோடி ஒதுக்கீடு செய்ய உள்ளோம்.

இந்தியாவில் 1 மில்லியன் (10 லட்சம்) ஃபாலோவர்களை கொண்டவர்கள் எண்ணிக்கை 11 ஆயிரத்தில் இருந்து 15 ஆயிரமாக உயரந்துள்ளது. உலக அளவில் உள்ள பல்வேறு நாட்டு தலைவர்களில் அதிகம் யூடியூப் ஃபாலோவர்களை வைத்துள்ளனர் பிரதமர் மோடி தான். அவர் 25 மில்லியன் பின்தொடர்பாளர்களை வைத்துள்ளார் என யூ-டியூப் CEO மோகன் நீல் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்