எல்லை மீறும் பாகிஸ்தான்., 9வது நாளாக தொடரும் காஷ்மீர் எல்லை தாக்குதல்!
காஷ்மீரில் இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் தொடர்ந்து 9வது நாளாக பாகிஸ்தான் ராணுவம் எல்லை மீறி தாக்குதல் நடத்தியதாகவும், அதற்கு இந்திய ராணுவம் பதில் தாக்குதல் நடத்தியதாகவும் செய்திகள் வெளியாகின.

காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் , பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை அடுத்து , இந்தியா பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இரு நாட்டு எல்லையிலும் வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் எல்லை மீறி இந்திய எல்லைக்குகள் தொடர் தாக்குதல் நடத்தி வருவதாகவும், அதற்கு இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்து வருவதாகவும் தொடர் செய்திகள் எல்லை பகுதியில் இருந்து வந்து கொண்டிருக்கின்றன.
ஜம்மு – காஷ்மீரில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு பகுதியின் வெவ்வேறு பகுதிகளில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ராணுவங்களுக்கு இடையேயான சிறிய அளவில் துப்பாக்கி சூடு தொடர்ந்து 9வது நாளாக (இரவு நேரங்களில்) தொடர்ந்ததாக இந்திய ராணுவ அதிகாரிகள் இன்று (சனிக்கிழமை) தெரிவித்துள்ளனர்.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் தொடங்கிய இந்த எல்லை மோதல்களில் இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. “இந்திய ராணுவம் உடனடியாக தங்கள் பதில் ராணுவ நடவடிக்கைகளை எல்லைகளில் அளித்து வருகிறது என இந்திய பாதுகாப்பு செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
இந்தியா – பாகிஸ்தான் எல்லை பகுதியில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இந்தியா – பாகிஸ்தான் என இரு நாடுகளும் பேச்சுவார்த்தைக்கு உட்பட்டு சுமூக உடன்பாடு எட்ட வேண்டும் என்றும், இரு நாடுகளும் சேர்ந்து பயங்கரவாதிகளை கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025