சென்னை : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து நேற்று டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் முப்படை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி தரும் நடவடிக்கைகளுக்காக முழுசுதந்திரம் அளித்திருப்பதாக பிரதமர் மோடி பேசியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கொல்கத்தா மைய பகுதியில் உள்ள ரிதுராஜ் ஹோட்டலில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் தீ […]
இஸ்லாமாபாத் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். அதைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக, இந்தியா கடுமையான முடிவுகளை எடுத்தது. அதன் வரிசையில், சிந்து நதியின் நீர் நிறுத்தப்பட்டது, பாகிஸ்தானும் விசாக்களை ரத்து செய்வது உட்பட இப்படி இந்தியா கடினமான முடிவுகளை ஒவ்வொன்றாக எடுத்து வருகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், முப்படை அதிகாரிகளுடன் நேற்றைய தினம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக என்ன செய்வது என்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். […]
டெல்லி : நடிப்பு , கார் பந்தயம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது வழங்கி மத்திய அரசு கௌரவித்து உள்ளது. நேற்று குடியரசு தலைவர் மாளிகையில் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் பதம்பூஷன் விருது பெற்றார் நடிகர் அஜித்குமார். அதன் பிறகு ANI செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் பஹல்காம் தாக்குதல் குறித்த தனது வருத்தத்தை பதிவு செய்தார். அவர் கூறுகையில்,”பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த அனைத்து குடும்பங்களுக்கும் எனது வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன், […]
காஷ்மீர் : மாநிலம் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் உலக அளவில் பெரும் பதற்றத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு உள்ளது என மத்திய அரசு குற்றம் சாட்டி பாகிஸ்தானுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே, ஜம்மு காஷ்மீர் அரசு இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும், சிறிய காயங்களுக்கு […]
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட ஹாஷிம் மூஸா பாகிஸ்தான் ராணுவத்தின் முன்னாள் பாரா கமாண்டோ(Para SF) என NIA தெரிவித்துள்ளது. தீவிரவாதிகளுக்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் 15 பேரிடம் நடத்திய விசாரணையில் இத்தகவல் உறுதியானது. ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத சம்பவத்தை அரங்கேற்ற அவர் தீவிரவாத அமைப்புடன் இணைந்து செயல்பட்டதாகவும் NIA தெரிவித்துள்ளது. ஹாசிம் மூஸாவை லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பிற்கு பாகிஸ்தான் […]
காஷ்மீர் : பஹல்காமில் 6 நாட்களுக்கு முன்பு நடந்த பயங்கரவாத தாக்குதலின் போது, எடுக்கப்பட்ட புதிய காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. அதில் முழு சம்பவமும் ஜிப்லைனில் சென்ற சுற்றுலாப் பயணிகளின் கேமராவில் பதிவாகியுள்ளது. அவர் Zip-Line-ல் பயணிக்கும் பொழுது, கீழே தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது. மக்கள் அச்சத்தில் அங்கும் இங்கும் ஓடுகின்றனர். சிலர் சுடப்பட்டு கீழே விழுகின்றனர். ஆனால், இவையேதும் தெரியாமல் சுற்றுலாப்பயணி சிரித்தபடி எஞ்சாய் செய்தார். பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக இந்தியா டுடேவிடம் பேசிய […]
டெல்லி : நடிகர் அஜித்குமாருக்கு பத்ம பூஷன் விருதை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார். நேற்றைய தினம் டெல்லியில் குடியரசு தலைவர் மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அஜித்குமார் உள்ளிட்ட தமிழ்நாட்டை சேர்ந்த 13 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டது. இதையடுத்து பத்திரிகையாளர் கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய அஜித் குமார், ” பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் தான் தனது இதயம் இருப்பதாக அஜித் தெரிவித்துள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்கக்கூடாது என […]
பஹல்காம் : கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் இன்னும் தீராத ஒரு சோகமான விஷயமாக இருந்து வருகிறது. இந்த தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு உள்ளது என மத்திய அரசு குற்றம் சாட்டி பாகிஸ்தானுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. பாகிஸ்தானின் ஆதரவுடன் செயல்படும் பயங்கரவாத அமைப்பான லஷ்கரே தொய்பயன் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னால் இருப்பதாக இந்திய அதிகாரிகள் […]
டெல்லி : காஷ்மீர், பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் இன்னும் தீராத ஒரு சோகமான விஷயமாக இருந்து வருகிறது. இந்த தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு உள்ளது என மத்திய அரசு குற்றம் சாட்டி பாகிஸ்தானுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த சூழலில், பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, ஜம்மு – காஷ்மீர் சட்டமன்றத்தில் இன்று சிறப்புக் கூட்டத்தொடர் கூட்டப்பட்டது . தாக்குதலில் இறந்த […]
டெல்லி : கடந்த வாரம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டதற்காக பிபிசி இந்தியாவில் விமர்சனங்களை எதிர்கொள்கிறது. இந்த தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு உள்ளது என மத்திய அரசு குற்றம் சாட்டி பாகிஸ்தானுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது இந்த நிலையில், பிபிசி இந்தியத் தலைவர் ஜாக்கி மார்ட்டினுக்கு எழுதிய கடிதத்தில், ”ஊடகங்கள் தங்கள் செய்திகளில் “பயங்கரவாதிகள்” என்பதற்குப் பதிலாக “போராளிகள்” என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது குறித்து […]
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர், பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு உள்ளது என மத்திய அரசு குற்றம் சாட்டி பாகிஸ்தானுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. விசா நிறுத்தம், தூதரக உறவு, வர்த்தக உறவு துண்டிப்பு, சிந்து நதிநீர் பகிர்வு நிறுத்தம் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அதேபோல பாகிஸ்தான் அரசும், இந்தியாவுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு […]
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியவர்கள், குற்றவாளிகள் கடுமையான பதிலடியை எதிர்கொள்வார்கள் என பிரதமர் மோடி கூறியுள்ளார். பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இரு நாடுகளும் எதிரெதிர் நாடுகளுக்கு எதிராக பல்வேறு தடை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, நாட்டையே துயரத்தில் ஆழ்த்திய இந்தத் தாக்குதல் குறித்து ஆழ்ந்த வேதனை […]
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம்தாக்குதலில் 26 இந்தியர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு TRF எனும் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று இருந்தது. இந்த TRF அமைப்பு பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கர் இ தொய்பா எனும் பயங்கரவாத அமைப்பின் ஆதரவு என்றும், இதனால் பாகிஸ்தானுக்கும் இதற்கும் தொடர்பு உள்ளது என்று இந்தியா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இதனால் வர்த்தகம், விசா, எல்லை பங்கீடு என இரு நாடு உறவுகளும் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளன. பயங்கரவாத தாக்குதலுக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என கூறி […]
லண்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதலை அடுத்து இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே எல்லை பதற்றம் அதிகரித்துள்ளது. இரு நாடுகளும் எதிரெதிர் நாடுகளுக்கு எதிராக பல்வேறு தடைகளை விதித்து வருகின்றன. இந்நிலையில், இந்த பயங்கரவாத தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு உள்ளது என்றும், பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் ஆதரவு அளிக்கிறது என்றும் குற்றசாட்டுகளை முன்வைத்து, லண்டனில் உள்ள பாகிஸ்தான் […]
சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த கொடூர தாக்குதலுக்கு உள்ளூர் முதல் உலக நாட்டு தலைவர்கள் வரை பலரும் தங்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இன்று சென்னை விமான நிலையத்திற்கு வந்த நடிகர் ராஜினிகாந்த்திடம் செய்தியாளர்கள் காஷ்மீர் தாக்குதல் பற்றி கேள்வி எழுப்பினர். அப்போது அவர், காஷ்மீர் சம்பவம் கண்டிக்கத்தக்கது என தனது கடும் அதிருப்தியை பதிவு செய்தார் […]
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு TRF எனும் உள்ளூர் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இந்த பயங்கரவாத கும்பலுக்கு உதவி செய்வது பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பு என்றும், இதற்கு பாகிஸ்தான் மறைமுக ஆதரவு என்றும் இந்தியா குற்றம் சாட்டி வருகிறது இதனால், பாகிஸ்தானுக்கு எதிராக வர்த்தகம், தூதரகம், நதிநீர் பங்கீடு, விசா என […]
கொச்சி: நாட்டையே உலுக்கிய கடந்த செவ்வாய்க்கிழமை ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடிய தீவிரவாத தாக்குதலில் தனது தந்தையை இழந்த கொச்சியைச் சேர்ந்த ஆரத்தி மேனன், ”காஷ்மீர் எனக்கு 2 சகோதரர்களை கொடுத்துள்ளது” என்று உருக்கமாக பேசியுள்ளார். பஹல்காமின் பைசரன் பள்ளத்தாக்கில் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட 26 பேரில், பெரும்பாலும் சுற்றுலாப் பயணிகளில் அவரது தந்தை 65 வயதான என். ராமச்சந்திரனும் ஒருவர். கொச்சியின் எடப்பள்ளியைச் சேர்ந்த ராமச்சந்திரனின் உடல் நேற்று முன் தினம் இரவு 8 மணியளவில் […]
இஸ்லாமாபாத் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்துள்ளன. முதலில் இந்தியா சிந்து ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து, பாகிஸ்தான் சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அறிவித்தது. இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தியது மட்டும் இல்லாமல், விசா கட்டுப்பாடுகளை அமல்படுத்துவதன் மூலம் பதிலடி கொடுத்தது. கூடுதலாக பாகிஸ்தானியர்களுக்கான மருத்துவ விசாக்கள் ரத்து செய்யப்பட்டன. இந்தியர்கள் பாகிஸ்தானுக்கு பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டனர். இந்த சூழலில் இன்றைய […]
பந்திபோரா : ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் இன்று காலை பயங்கரவாதிகள் இருப்பதாகக் கிடைத்த குறிப்பிட்ட உளவுத்துறை தகவலின் பேரில், இந்திய ராணுவமும் ஜம்மு காஷ்மீர் காவல்துறையும் இணைந்து பந்திப்போராவில் கூட்டுத் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டன. அப்பொழுது, பயங்கரவாதிகள் இருக்கும் இடத்தை அடைந்ததும், துப்பாக்கிச் சண்டை நடந்தது. பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில் லஷ்கர்-இ-தொய்பா (எல்இடி) உயர்மட்ட தளபதி அல்தாஃப் லல்லி கொல்லப்பட்டார் என்று தற்பொழுது தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி […]
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா – பாகிஸ்தான் இடையான தொடர் ‘தடை’ நடவடிக்கைகள் இரு நாட்டு உறவுகளில் பெரும் விரிசலை ஏற்படுத்தி வருகிறது. இரு நாடுகளும் பதிலுக்கு பதில் தடை நடவடிக்கைகளை தொடர்ந்து வருகிறது. பஹல்காம் தாக்குதலை நடத்தியது காஷ்மீரில் செயல்பட்டு வரும் TRF தீவிரவாத அமைப்பு ஆகும். இந்த அமைப்பு பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் துணை அமைப்பு என்ற குற்றசாட்டுக்கள் எழுந்துள்ளன. இதன் அடிப்படையிலேயே […]