ஆபரேஷன் சிந்தூரில் அசார் குடும்பத்தினர் 10 பேர் உயிரிழப்பு! பயங்கரவாதி வெளியிட்ட பரபரப்பு தகவல்!

பயங்கரவாதிகள் முகாம்களை குறிவைத்து பாகிஸ்தானில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் பயங்கரவாதி மசூத் அசாரின் குடும்பத்தினர் 10 பேர் உயிரிழந்தனர்.

Jaish e mohammed leader Masood Azhar

இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களை குறிவைத்து வான்வெளி தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில், ஜெய்ஷ் இ முகமது, லஷ்கர் இ தொய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய பயங்கரவாத அமைப்புகளின் முகாம்கள் அழிக்கப்பட்டன. இதில் 70 முதல் 80க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் உயிரிழந்து இருக்க கூடும் என கூறப்படுகிறது. அதிலும், பஹாவல்பூரில் நடந்த தாக்குதலில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் ஆசார் உயிரிழந்திருக்க கூடும் எனக் கூறப்பட்டது.

தற்போது, அதுபற்றிய ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதனை பயங்கரவாதி மசூத் அசார் தரப்பு வெளியிட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. அதில், இந்தியா நடத்திய தாக்குதலில், அசாரின் மூத்த சகோதரி மற்றும் அவரது கணவர், அவரது மருமகன் மற்றும் அவரது மனைவி, மற்றொரு மருமகள் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து குழந்தைகள் என மசூத் ஆசாரின் குடும்பத்தினர் 10 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், பஹல்பூர் தாக்குதலில் மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2000-ல் மசூத் அசாரால் நிறுவப்பட்ட ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு, 2001 நாடாளுமன்ற தாக்குதல், 2016-ல் பதான்கோட் தாக்குதல் மற்றும் 2019-ல் புல்வாமா தாக்குதல் என பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களுக்கு பின்னணியில் இருந்துள்ளது எனக் கூறப்பட்டுள்ளது. பஹாவல்பூரில் பிறந்த அசார் நகரத்தில் பலத்த பாதுகாப்புடன் கூடிய வளாகத்தில் உயிருடன் இருந்து வருகிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்