டெல்லி : மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில், ‘தாக்குவது என்று முடிவெடுத்துவிட்டால், ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும். அவர்களின் கைகளைக் கட்டிவிட்டு போருக்கு அனுப்பக் கூடாது’ என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டிருந்தார். இதற்கு பதிலளித்து பேசிய பிரதமர் மோடி, ”தாக்குதல் நடத்துவது குறித்து முடிவு செய்ய ஆயுதப் படைகளுக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டது, பயங்கரவாதிகள் தண்டிக்கப்பட்டதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர்கள் இன்றுவரை தூக்கமில்லாத இரவுகளைக் கழிக்கும் […]
டெல்லி : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் காரசாரமான விவாதங்களுடன் நடந்துவருகிறது. இன்று ஆபரேஷன் சிந்தூர் பற்றிய எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு அரசு பதிலளித்து வருகின்றது. அதில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குறித்து சவால் விடுத்துள்ளார். இந்தியா-பாகிஸ்தான் இடையேயான மோதலை நிறுத்தியதாக டிரம்ப் 25 முறை கூறியதாகவும், இதற்கு மோடி ஒரு முறை கூட பதிலளிக்கவில்லை என்றும் ராகுல் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், டிரம்பின் பதவியேற்பு விழாவிற்கு மோடிக்கு அழைப்பு […]
டெல்லி : மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பேசுகையில், ”பஹல்காம் தாக்குதல் குறித்து விவாதிப்பதே மனதுக்கு வலியை தருகிறது, பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களை எனது உறவினர்கள் இறந்தது போல கருதுகிறேன். மனைவி கண்முன்னே கணவர் கொல்லப்பட்ட கொடூரம் அரங்கேறியது. எதிரிகளை தாக்குவது என்று முடிவெடுத்துவிட்டால், ராணுவத்திற்கு முழு சுதந்திரம்அளிக்க வேண்டும். அவர்களின் கைகளைக் கட்டிவிட்டு போருக்கு அனுப்பக் கூடாது. 1971ல் பாகிஸ்தான் போரின் போது இந்திய இராணுவத்திற்கு அப்போதைய பிரதமர் இந்திரா […]
டெல்லி : நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி, மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பணிவு மற்றும் நாகரிகமான அணுகுமுறையை பின்பற்ற வேண்டும் என்று கூறியிருக்கிறார். அவர் தனது பேச்சில், மும்பை தீவிரவாதத் தாக்குதல் நடந்தபோது, பிரதமராக இருந்த மன்மோகன் சிங் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டார். அவரிடம் இருந்து பணிவைக் கற்றுக் கொள்ளுங்கள். பஹல்காம் தாக்குதலுக்கு யார் பொறுப்பு? காங்கிரசை விட பாஜக தான் நேருவை அதிகம் நினைவு வைத்திருக்கிறது. […]
டெல்லி : நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி, மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில், “தமிழன் கங்கையை வெல்லுவான், நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்” என்று உரக்க முழங்கினார். அவர் தனது பேச்சில், “கங்கைகொண்ட சோழன், கங்கையை வென்றவன். பஹல்காம் தாக்குதலை நீங்கள் தடுத்திருக்க வேண்டாமா? முந்தைய தாக்குதலில் இருந்து பாடம் கற்றிருக்க வேண்டாமா? விஸ்வகுரு என்ன கற்றுக் கொண்டார்?” என்று கேள்வி எழுப்பினார். மேலும், உள்துறை அமைச்சர் அமித் ஷா எதிர்க்கட்சிகள் மீது பழி போடுவதில் மும்முரமாக […]
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்களவையில் பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் மகாதேவ் குறித்து உரையாற்றினார். ஏப்ரல் 22, 2025 அன்று ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பைசாரன் பள்ளத்தாக்கில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதை காட்டுமிராண்டித்தனமான செயல் என்று கண்டித்தார். “அப்பாவி பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினர் முன்னிலையில் மதத்தைக் கேட்டு கொல்லப்பட்டனர். இந்தச் செயலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்,” என்று அவர் தெரிவித்தார். ஆபரேஷன் […]
புதுடெல்லி : ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து மக்களவையில் இன்று (ஜூலை 29) பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏப்ரல் 22, 2025 அன்று ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் 26 பொதுமக்கள் உயிரிழந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ஆயுதப்படைகள் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoJK) பயங்கரவாத உள்கட்டமைப்புகளை துல்லியமாக தாக்கி அழித்த ஆபரேஷன் சிந்தூர் குறித்து மக்களவையில் நேற்று (ஜூலை 28) 16 மணி நேர விவாதம் […]
டெல்லி : பஹல்காமில் பொதுமக்கள் மற்றும் ராணுவத்தினரை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்துர் மூலம் உடனடியாக பதிலடி கொடுத்தது குறித்து ராஜ்நாத் சிங் மக்களவையில் விரிவாகப் பேசினார். ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து மக்களவையில் 16 மணி நேரம் விவாதம் நடைபெறவுள்ளது. இன்று பிற்பகல் மக்களவையில் ஆபரேஷன் சிந்துர் குறித்த விவாதத்தைத் தொடங்கிவைத்து பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ”இந்திய ராணுவப் படைகள் நம் எல்லையை மட்டுமல்ல, நம் நாட்டின் […]
ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் அருகே ஹர்வான் பகுதியில் உள்ள தச்சிகாம் காட்டில், ‘ஆப்ரேஷன் மகாதேவ்’ என்ற பெயரில் நடத்தப்பட்ட பாதுகாப்பு படை நடவடிக்கையில், பஹல்காம் தாக்குதலில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மூன்று தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்திய ராணுவம், ஜம்மு காஷ்மீர் காவல்துறை மற்றும் மத்திய ரிசர்வ் காவல் படை (CRPF) இணைந்து நடத்திய இந்த என்கவுண்டரில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளான சுலேமான் சாஹா, அபு ஹம்ஸா மற்றும் யாசிர் என அடையாளம் காணப்பட்டவர்கள் உயிரிழந்தனர். ஆபரேஷன் […]
டெல்லி : அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்த விவாதத்தைத் தொடங்கி வைத்தார். ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து மக்களவையில் 16 மணி நேரம் விவாதம் நடைபெறவுள்ளது. இப்பொது, பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தியபோது என்ன நடந்தது என்பது குறித்து ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்து வருகிறார். மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவாதத்தின் போது, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில்,, ”பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். மே 6 […]
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீரில் (POJK) ஒன்பது பயங்கரவாத மறைவிடங்கள் மீது இந்தியா துல்லியமான வான்வழித் தாக்குதலை நடத்தியது. 15 நாட்களுக்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் இந்த நடவடிக்கைக்குப் பிறகு, இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த சூழலில் பாகிஸ்தானின் மிகப்பெரிய ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதலை இந்தியா முறியடித்துள்ளது. மேலும், இந்தியாவின் […]
காஷ்மீர் : ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கியது. மே 7, 2025 அன்று அதிகாலை 1:05 மணிக்கு, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடங்கியது. ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor) என்ற பெயரில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 பயங்கரவாதி முகாம்களைக் குறிவைத்து இந்திய ராணுவம் நேற்று நள்ளிரவு தாக்குதல் நடத்தியது. நம்பகமான உளவுத்துறை தகவல்கள் […]
இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களை குறிவைத்து வான்வெளி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில், ஜெய்ஷ் இ முகமது, லஷ்கர் இ தொய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய பயங்கரவாத அமைப்புகளின் முகாம்கள் அழிக்கப்பட்டன. இதில் 70 முதல் 80க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் உயிரிழந்து இருக்க கூடும் என கூறப்படுகிறது. அதிலும், பஹாவல்பூரில் நடந்த […]
டெல்லி : இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களில் இன்று அதிகாலை நடத்திய ஆபரேஷன் சிந்தூர் பற்றி இந்திய ராணுவம் மற்றும் வெளியுறவுத் துறை செயலர் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தனர். பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக மட்டுமல்லாமல் இதற்கு முன் இந்தியாவுக்கு எதிராக நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாகவும் பல்வேறு பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி அழித்துள்ளது . இதுகுறித்து இன்று ராணுவ உயர் அதிகாரி சோபியா […]
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களை குறிவைத்து தாக்கினர். மொத்தம் 9 இடங்களில் இந்த தாக்குதல் நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் உயிரிழந்திருக்கக் கூடும் என தகவல் வெளியாகியது. இந்த தாக்குதல் குறித்து இன்று காலை விளக்கம் அளிக்க உள்ளதாக இந்திய ராணுவம் சார்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் டெல்லியில் செய்தியாளர் […]
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது வான்வெளி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் இதுவரை 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் உயிரிழந்திருக்க கூடும் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்திய ராணுவம் இன்று அதிகாலை நடத்திய தாக்குதலில் 4 இடங்கள் பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்தன. மீதம் உள்ள 5 இடங்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு […]
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் 9 இடங்களில் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த தாக்குதலானது பயங்கரவாதிகள் இருப்பிடங்களை குறிவைத்து மட்டுமே நடத்தப்பட்டது என்றும், பாகிஸ்தான் மக்கள் மீதோ, ராணுவம் மீதோ இந்த தாக்குதல் நடத்தப்படவில்லை என இந்திய […]
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் என்பது அதிகரித்துள்ளது. இரு நாட்டு படைகளும் தங்கள் படைகளை பலப்படுத்தும் நோக்கில் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன. இப்படியான சூழலில் பொதுமக்களும் இந்த போர் சூழும் சூழலில் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில அரசுகளுக்கும் போர்க்கால ஒத்திகையை நாளை (மே 7) நடத்த […]
மாஸ்கோ : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று (திங்கள்கிழமை) பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கடந்த மாதம் 22 ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். பிரதமர் மோடியிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசிய ரஷ்ய அதிபர் புதின்,”இத்தாக்குதல் கடும் கண்டனத்துக்குரியது, பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். தீவிரவாதத்துக்கு எதிரான போரில், இந்தியாவுக்கு முழு ஆதரவையும் அளிப்பதாகவும்” […]
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை அடுத்து இக்கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகளையும், அவர்களுக்கு உதவிய நபர்களையும் தேடும் பணிகள் இந்திய ராணுவத்தால் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் காஷ்மீர் உள்ளூர் பகுதியில் உள்ளூர் போலீசாரின் தேடுதல் தீவிரமாகியுள்ளது. அப்போது கடந்த சனிக்கிழமை அன்று காஷ்மீர் குல்காம் பகுதியை சேர்ந்த இம்தியாஸ் அகமது மக்ரே எனும் 23 வயது இளைஞர் காஷ்மீர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். […]